• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Mekedatu | மத்திய அரசு அனுமதித்தவுடன் மேகதாது அணை கட்டப்படும் - எடியூரப்பா உறுதி

Mekedatu | மத்திய அரசு அனுமதித்தவுடன் மேகதாது அணை கட்டப்படும் - எடியூரப்பா உறுதி

எடியூரப்பா

எடியூரப்பா

மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.

  • Share this:
    கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது. மேலும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், அனுமதி கிடைத்த பிறகே அணை கட்டப்படும் என்றும் கர்நாடக தரப்பில் முறையிடப்பட்டது.Will start work on Mekedatu project soon: Yediyurappa

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Relaxation Lockdown | தமிழகத்தில் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா?  ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..

    இதனையேற்றுக்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், மேகதாது பகுதியில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு அளித்திருந்த கோரிக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக அரசின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே, மத்திய அரசு அனுமதித்தவுடன் மேகதாது அணை கட்டப்படும் என்று எடியூரப்பா உறுதிபடக் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: