தெரு நாய் இறந்தால் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்; 250 விவசாயிகள் போராட்டக்களத்தில் இறந்துள்ளனர், பதவிநீக்கினாலும் சரி குரல் கொடுப்பேன்: மேகாலயா ஆளுநர் திட்டவட்டம்

தெரு நாய் இறந்தால் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்; 250 விவசாயிகள் போராட்டக்களத்தில் இறந்துள்ளனர், பதவிநீக்கினாலும் சரி குரல் கொடுப்பேன்: மேகாலயா ஆளுநர் திட்டவட்டம்

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்.

 • Share this:
  விவசாயிகள் போராட்டத்தை பாஜக தொடர்ந்து அசட்டை செய்துவந்தால் எதிர்காலத்தில் உ.பி., ஹரியாணா, ராஜஸ்தானில் பாஜக வலுவிழக்கும் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

  அவர் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்குக் கூறியதாவது:

  ஒரு தெருநாயின் உயிரிழப்பு கூட வருந்தத்தக்க செய்தியாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால், தலைநகர் டெல்லியில் இதுவரை 250 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் துறந்துள்ளனர். இதைப் பற்றி அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை, யாரும் இரங்கல்கள் கூட தெரிவிக்கவில்லை.

  நான் இது குறித்து பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் பேசினேன். விவசாயிகள் வெறுங்கையுடன் அனுப்பப் படக் கூடாது. அரசு பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்.

  டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை, பாஜக தொடர்ந்து அசட்டை செய்துவந்தால் எதிர்காலத்தில் உ.பி., ஹரியாணா, மேற்கு ராஜஸ்தானில் பாஜக வலுவிழக்கும்.

  விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசிவருகிறேன். விவசாயிகளை வெறுங்கைகளுடன் போராட்டக் களத்திலிருந்து திருப்பி அனுப்பக் கூடாது. அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். ஒருவேளை விவசாயிகளுக்குக் குரல் கொடுப்பதால் நான் அரசாங்கத்தை எதிர்க்கிறேன் என நினைத்தால் நான் ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன். என்னைப் பதவி நீக்கம் செய்தலும் கவலையில்லை. ஆளுநராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்.

  விவசாயிகளின் இந்த நிலையை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க இயலவில்லை. என் பேச்சு பாஜகவை பலவீனப்படுத்தும் என நான் நினைக்கவில்லை. மாறாக யாரேனும் ஒருவராவது நமக்காகக் குரல் கொடுக்கிறார்களே என்ற எண்ணத்தையே விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும்.

  என்னால் விவசாயிகளின் நிலைமைகளை பார்த்து கொண்டு சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜக தலைவர்கள் கிராமங்களை விட்டு வெளியே வர முடியவில்லை. ஏனெனில் எம்.எல்.ஏ.க்களை மக்கள் அடிக்கின்றனர். அரசாங்கத்துக்கு தீங்கு விளைவிப்பவர்கள் யார் தெரியுமா? விவசாயிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்பவர்களே. என் பேச்சு கட்சியை பாதிக்காது, யாராவது நமக்காகப் பேசுகிறார்களே என்று விவசாயிகளை யோசிக்க வைக்கும்.

  இவ்வாறு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

  சத்யபால் மாலிக்கின் எதிர்ப்புகள் புதிதல்ல, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது சத்யபால் மாலிக்தான் ஜம்மு காஷ்மீர் கவர்னர். இவர் உடனே கோவாவுக்கு மாற்றப்பட்டார். பிறகு மேகாலாயாவுக்கு மாற்றப்பட்டார். கோவாவில் பாஜக அரசுக்கும் இவருக்கும் ஒத்து வரவில்லை.

   
  Published by:Muthukumar
  First published: