“கான்ட்ராக்டர் மேல புல்டோசர் விட்டு ஏத்துவேன்” - நிதின் கட்கரி

டெல்லியில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்து எந்த ஒப்பந்ததாரரும், சாலைத் திட்ட ஒப்பந்தங்களை பெற்றது இல்லை என்றும் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 10:07 AM IST
“கான்ட்ராக்டர் மேல புல்டோசர் விட்டு ஏத்துவேன்” - நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Web Desk | news18
Updated: December 7, 2018, 10:07 AM IST
சாலைகளின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, சாலைகள் சரியில்லை என்றால் ஒப்பந்ததாரர் மேல் புல்டோசர் விட்டு ஏற்றுவேன் என்று பேசியுள்ளார்.

பாஜக நிர்வாகியும் எழுத்தாளருமான துஹின் சின்ஹா எழுதியுள்ள ‘இந்தியா இன்ஸ்பையர்ஸ்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது. தொழிலதிபர் ரத்தன் டாட்டா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

புத்தகத்தை வெளியிட்ட மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களை இதுவரை வழங்கியுள்ளோம். டெல்லியில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்து எந்த ஒப்பந்ததாரரும், சாலைத் திட்ட ஒப்பந்தங்களை பெற்றது இல்லை.

ஆனால், எல்லா ஒப்பந்ததாரர்களிடமும் நான் ஒன்றைச் சொல்ல தயங்கியதே இல்லை. அது, சாலைகள் தரமாக இல்லை என்றால் அவர்கள் மீது புல்டோசரை விட்டு ஏற்றுவேன் என்பதே. சாலைகள் நாட்டின் சொத்து, அதன் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது” என்று பேசினார்.
Loading...


Also See.. போர்ப்ஸ் பட்டியலில் ரஜினி, விஜய்

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...