”மீண்டும் வருவேன்” உ.பி அரசுக்கு சவால் விடுத்துச் சென்ற பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி விவகாரத்தில், உத்தர பிரதேச அரசு சர்வாதிகார தன்மையுடன் நடந்து கொண்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

news18
Updated: July 21, 2019, 6:47 AM IST
”மீண்டும் வருவேன்” உ.பி அரசுக்கு சவால் விடுத்துச் சென்ற பிரியங்கா காந்தி
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி
news18
Updated: July 21, 2019, 6:47 AM IST
சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த பிறகு, 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டதை பிரியங்கா காந்தி முடித்துக் கொண்டார். பிரியங்காவை தடுப்புக்காவலில் வைத்திருந்த உத்தர பிரதேச அரசின் செயல் சர்வாதிகாரத்தனமானது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் கடந்த வாரம் நிலத்தகராறு தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறப் போவதாகக் கூறி, சோன்பத்ராவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். ஆனால் சோன்பத்ரா பகுதியில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, காவல்துறையினர் அவரை தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் நகரமாட்டேன் எனக்கூறி, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.


பிரியங்கா தன் முடிவில் உறுதியாக இருந்ததால், காவல்துறையினர் அவரை சுனார் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரியங்கா, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைப்பது கிரிமினல் குற்றமா என கேட்டு போராட்டத்தில் குதித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல், புறப்பட போவதில்லை என்றும் அறிவித்தார். பிரியங்காவின் போராட்டம் 24 மணி நேரத்தை கடந்தும் நீடித்தது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பிரியங்காவை சந்தித்தனர். அவர்களுக்கு பிரியங்கா ஆறுதல் தெரிவித்தார்.பிற்பகலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுனாரில் பிரியங்காவை சந்தித்தனர். மோதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் காங்கிரஸ் சார்பில் நிதி வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததை தொடர்ந்து போராட்டத்தை முடித்துக் கொண்டார். ஆனால், தான் மீண்டும் சோன்பத்ரா வருவேன் என்றும் அவர் அறிவித்தார். பின்னர் அங்கிருந்து வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு அவர் புறப்பட்டு சென்றார்.இதனிடையே பிரியங்கா காந்தி விவகாரத்தில், உத்தர பிரதேச அரசு சர்வாதிகார தன்மையுடன் நடந்து கொண்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களை கண்டு, தலித்துகளுக்கு ஆதரவாக போராடுவதை காங்கிரஸ் கைவிடாது என்றும் ராகுல் கூறியுள்ளார்.

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...