Home /News /national /

பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும் - கோவா முதலமைச்சர் வலியுறுத்தல்

பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும் - கோவா முதலமைச்சர் வலியுறுத்தல்

 கோப்பு படம்

கோப்பு படம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) அமைப்பை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தவேன் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

    கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அன்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுனவம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்ய வேண்டும். இதை நான் மத்திய அரசிடம் வலியுறுத்தவுள்ளேன். மதமாற்றம் தொடர்பாக எனது கருத்துக்கு பாப்புலர் பிரண்ட் விடுத்துள்ள அறிக்கை அர்த்தமற்றது என்றுள்ளார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது, "கோவாவில் மத மாற்றத்தை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம். இந்த விவகாரத்தை கோவா அரசு கூர்ந்து கவனித்துவருகிறது. போர்த்துக்கீசியர்கள் காலத்தில் சேதமடைந்த அனைத்து கோயில்களையும் புனரமைக்க ரூ.20 கோடி செலவிடப்படும்.

    ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைவருக்குமான அரசாக உள்ளது.

    பெண்களுக்கு அனைத்து துறையிலும் சம உரிமை வழங்கிய முதல் மாநிலம் கோவா தான். எனவே, இந்த சமத்துவத்தை நாடு முழுவதும் பின்பற்றும் விதமாக பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும். கோவாவில் அனைத்து மக்களும் ஒன்றாக சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர்" என்றார்.

    இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் குறைக்கவேண்டும்- மத்திய அமைச்சர் கோரிக்கை

    கோவா முதலமைச்சரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

    "மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தூண்டும் விதமாகவே இதுபோன்ற கருத்தை கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோவாவில் மதமாற்றம் பிரச்னை இல்லை" என மாநில காங்கிரஸ் தலைவர் மைக்கல் லோபா தெரிவித்துள்ளார்.

    "நாட்டில் விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் நாக்பூரில் உள்ள தனது எஜமானர்களை குஷிபடுத்தவே கோவா முதலமைச்சர் இவ்வாறு பேசி வருகிறார். அவர் மாநிலத்தில் உள்ள பொது மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்" என பப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கூறியுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பை மத்திய அரசு தடை செய்யவுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு இது போன்ற முடிவு ஏதும் எடுக்கவில்லை என அச்செய்திக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Goa cm, Religious conversion

    அடுத்த செய்தி