வயநாட்டில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி? கேரளாவில் கிளம்பிய பரபரப்பு!

Lok Sabha Election 2019 | வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ள பிரதமர் மோடி, பெங்களூர் தெற்கு தொகுதியில் இரண்டாவதாக போட்டியிடலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Web Desk | news18
Updated: March 23, 2019, 2:52 PM IST
வயநாட்டில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி? கேரளாவில் கிளம்பிய பரபரப்பு!
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: March 23, 2019, 2:52 PM IST
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை தென் மாநிலங்களிலிருந்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தென் மாநில காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து வந்துகொண்டேதான் இருக்கின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் கர்நாடகா காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி கர்நாடகாவிலிருந்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது கேரள காங்கிரஸ் கோட்டையான வயநாட்டிலிருந்து ராகுல் போட்டியிட வேண்டும் என கேரள காங்கிரஸ் சார்பில் ராகுலுக்குத் தொடர்ந்து வேண்டுகோள்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

துவக்கத்திலேயே, வயநாடு குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என ராகுல் காந்தி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கேரள காங்கிரஸார் இன்னும் நம்பிக்கையுடனேயே கேரளாவில் ராகுல் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பிலேயே உள்ளனர்.

கேரளாவில் வயநாடு காங்கிரஸின் ஆஸ்தான கோட்டையாகவே உள்ளது. ஆனால், உள்கட்சியில் நிலவி வரும் பூசலால் வய்நாட்டில் யாரை வேட்பாளராகக் காங்கிரஸ் முன்னிறுத்த உள்ளது என்ற குழப்பம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். இதேபோல, வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ள பிரதமர் மோடி, பெங்களூர் தெற்கு தொகுதியில் இரண்டாவதாக போட்டியிடலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் பார்க்க: அமித்ஷாவிடம் அதிமுக அடகு வைத்துள்ளது - ஸ்டாலின் ஆவேச பேச்சு!
Loading...
First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...