மேலிடம் உத்தரவிட்டால் உடனடியாக ராஜினாமா செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினமா செய்வேன் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பாவை கட்சி மேலிடம் மாற்ற விரும்புவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள எடியூரப்பா, ”கட்சி மேலிடம் கூறினால் உடனடியாக ராஜினாமா செய்வேன்” என்றார்.

  ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எடியூரப்பா, “பாஜகவில் மாற்று தலைமை இல்லை என நான் கருதவில்லை. டெல்லியில் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைமை கூறும் வகையில் நான் முதல்வராக இருப்பேன். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகத்தயார். கர்நாடக மாநிலத்துக்கு முதல்வராக இல்லாமலேயே சேவையாற்ற தயாராக இருக்கிறேன். என்னுடைய நிலைப்பாடு தெளிவானது.

  Also Read: புயல் நிவாரணப் பொருட்களைத் திருடினாரா பாஜகவின் சுவேந்து அதிகாரி? -போலீசார் வழக்குப் பதிவு

  எனக்கு வாய்ப்பளித்தார்கள், அதை நான் என் திறமைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறேன். மற்றதெல்லா மத்திய தலைமையைப் பொறுத்தது, அவர்கள் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்.

  மாற்று இல்லை என்ற பேச்சுக்கு இடமில்லை, நாடு முழுதும் மாற்று உள்ளது. கர்நாடகாவில் மாற்று இல்லை என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். மத்திய தலைமை என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரை நான் தொடர்வேன்” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எடியூரப்பாவின் மகனும் மாநில பாஜக துணைத்தலைவருமான விஜேந்திரா நேற்று பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் பேசியிருந்த நிலையில், எடியூரப்பா மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

  Also Read: இ-பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை...!

  கர்நாடகா மாநிலத்தில் தலைமையில் மாற்றம் தேவை என்ற செய்திகள் எழுந்த நிலையில் முதன் முதலாக எடியூரப்பா மவுனம் கலைத்துள்ளார்.

  பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவியும் எடியூரப்பா ஆட்சி தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: