முகப்பு /செய்தி /இந்தியா / நாகாலாந்து தேர்தல்: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்.. பாஜக தலைவர் ஜேபி நட்டா வாக்குறுதி!

நாகாலாந்து தேர்தல்: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்.. பாஜக தலைவர் ஜேபி நட்டா வாக்குறுதி!

ஜேபி நட்டா

ஜேபி நட்டா

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. பாஜக பொறுப்பேற்ற பிறகே நிலையான ஆட்சி இருக்கிறது - நட்டா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagaland, India

நாகாலாந்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்குறுதி அளித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் வரும் 27 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், பாஜக 20 இடங்களிலும், அந்த அணியில் உள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அம்மாநில தலைநகர் கோஹிமாவில், ஜே.பி.நட்டா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் மிகுந்த கவனத்துடன் முடிவு செய்ய வேண்டும் என்றார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்ததாக குற்றம்சாட்டிய நட்டா, பாஜக பொறுப்பேற்ற பிறகே நிலையான ஆட்சி இருப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில், பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. திரிபுராவிலும் பாஜக ஆட்சி அமைந்தால், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: JP Nadda, Nagaland, Scooters