ஹோம் /நியூஸ் /இந்தியா /

2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை - ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை - ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

5ஜி தொடக்க விழாவில் முகேஷ் அம்பானி

5ஜி தொடக்க விழாவில் முகேஷ் அம்பானி

2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  21ஆம் நூற்றாண்டின் முன்னணி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 5ஜி சேவைதான் திறவுகோளாக இருக்க போகிறது என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 6வது இந்திய கைபேசி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாட்டில் 5ஜி சேவையை முதற்கட்டமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டில் 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவைகளை அறிமுகமாகிறது.

  இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர்.

  5ஜி சேவை அறிமுகத்திற்குப் பின் நிகழ்வில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணரிவு, ரோபோட்டிக்ஸ், பிளாக்செயின்,மெட்டாவெரஸ் போன்றவற்றை பயன்படுத்தும் திறவுகோளாக 5ஜி இருக்கப்போகிறது. 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவையை கொண்டு சேர்ப்பதே இலக்கு. இந்திய கைபேசி மாநாடு இனி ஆசிய கைபேசி மாநாடாக மாற வேண்டும். நாம் பெரிய செயல்களை செய்ய தயாராக உள்ளோம். இவை அனைத்தும் பிரதமரின் உறுதியான செயல்பாட்டால்தான் சாத்தியமானது. உலக அரங்கில் தொலைத்தொடர்பு துறையில் தலைமை ஏற்க நாம் தயாராக உள்ளோம்.

  5ஜி என்ற சொல்லை வைத்து இந்தியா 5 இலக்குகளை நோக்கி பயணித்து நாம் நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

  1. 5ஜி தொழில்நுட்பம் மூலம் சாமானிய இந்தியர்களுக்கும் உலக தரம் வாய்ந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை கொண்டு சேர்ப்பது.

  2. நாட்டின் அனைத்து கிராமப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கூடுதலாக முதலீடு செய்யாமல் 5ஜி மூலம் சிறந்த சுகாதார சேவையை வழங்குவது.

  3.நாட்டில் கிராம நகர்புர ஏற்றத் தாழ்வை களைந்து, வேளாண்மை, சேவை, தொழில், வர்த்தகம் போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தாலம்.

  இதையும் படிங்க: சோழர்களின் பெருமையை நாம் முழுமையாக உணரவில்லை.. பெரிய கோயிலின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா

  4. நாட்டின் அனைத்து துறைகளிலும் நவீனத்தை புகுத்தி இந்திய பொருளாதாரத்தை குறிப்பாக சிறு குறு தொழில்களின் உற்பத்தி, லாபத்தை பெருக்கலாம்.

  5. மேலும், 5ஜி சேவையானது இந்தியாவை உலகின் அறிவுசார் தலைநகராக மாற்றி, உயர் மதிப்பிலான டிஜிட்டல் சேவைகளை இந்தியர்கள் உலகிற்கு தரலாம்.

  இவ்வாறு முகேஷ் அம்பானி தனது உரையில் பேசினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: 5G technology, Mukesh ambani, PM Modi