முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம் - நிதிஷ் குமார்

நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பு பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

news18
Updated: June 14, 2019, 8:23 AM IST
முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம் - நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
news18
Updated: June 14, 2019, 8:23 AM IST
முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் எதிர்போம் என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு 17 இடங்களில் கைப்பற்றியது. இதையடுத்து மத்திய அமைச்சரவை பட்டியலில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறவில்லை.

இதனால் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்பதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து வருவதால் அந்த நிலையை தொடர்வதாகவும் ஐக்கிய ஜனதா தளக் கட்சி கூறியுள்ளது.

முத்தலாக் மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற பாஜக தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த அறிவிப்பு பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...