Home /News /national /

இந்தியாவில் 3-வது அலையை ஒமைக்ரான் ஏற்படுத்துமா? மருத்துவ வல்லுனர்கள் விளக்கம்

இந்தியாவில் 3-வது அலையை ஒமைக்ரான் ஏற்படுத்துமா? மருத்துவ வல்லுனர்கள் விளக்கம்

கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக அதிகரித்துள்ளது. இதைப் பார்க்கும்போது, 3 வது அலை விரைவில் ஏற்படும் என்று கருதுகிறேன் என நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் 3வது அலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்புகளில் 50 சதவீதம் காணப்படுகிறது. இதிலிருந்து மக்கள் தொகை அதிக நெருக்கமுள்ள பகுதிகளில் ஒமைக்ரான் பரவல் அதிகம் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஒமைக்ரான் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க : தேசிய அளவில் புதிதாக 6 கிளைகளை ஏற்படுத்தும் என்.ஐ.ஏ. - 300 பணியிடங்கள் உருவாக்கம்

    பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

    கடந்த ஒரு வாரமாகத்தான் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. இது 3வது அலையை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று உலகின் மற்ற சில முக்கிய நாடுகளிலும் திடீரென ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுபற்றி மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை.

    இதையும் படிங்க : அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் மோதலில் ஈடுபட்ட அமைச்சர்கள்... பரபரப்பு சம்பவம்

    நாட்டில் 80 சதவீதம் பேருக்கு இதுபோன்ற வைரஸ் தாக்குதல் அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்படலாம். இந்தியாவில் வயது வந்தவர்களில் 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை  செலுத்தியுள்ளார்கள். சுமார் 65 சதவீதம்பேர் முழு டோசையும் செலுத்தியுள்ளனர்.

    தென்னாப்பிரிக்காவை ஆய்வு செய்து பார்த்தால், அங்கு 2 வாரங்களுக்கு ஒமைக்ரான் பரவல் மிக அதிகமாக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவில்லை. இந்த நிலவரங்கள் அனைத்தும் விரைவில் ஒமைக்ரான் பரவல் உலகம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்பதை நமக்கு தெரிவிக்கிறது.

    இதையும் படிங்க : பாதிப்பு அதிகரித்தால் முழு ஊரடங்கு... பொதுமக்களை எச்சரிக்கும் மேயர்

    இந்தியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் இயற்கையாகவே ஒமைக்ரான் அதிகரித்துள்ளது. இரு நாட்டில் இருப்பவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக அதிகரித்துள்ளது. இதைப் பார்க்கும்போது, 3 வது அலை விரைவில் ஏற்படும் என்று கருதுகிறேன். தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்கள் ஒமைக்ரான் பற்றி அச்சப்படத் தேவையில்லை. அதேநேரம் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக நாம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி