ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக சென்று வரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக சென்று வரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி!

குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பரப்புரை

குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பரப்புரை

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அம்மாநிலத்தவர்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோயில் இலவசமாக சென்று வரும் திட்டத்தை நிறைவேற்றுவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி தந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்னும் சில மாதங்களில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. டெல்லியில் முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை வளர்த்தெடுக்கும் வேலையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

  தனது முயற்சியை வெற்றிகரமாக சாதித்து காட்டி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. அத்துடன் ஹரியானா மாநிலத்திலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இதைத் தவிர குஜராத் மாநிலத்திலும் அக்கட்சிக்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது.

  இதை நம்பிக்கையாகக் கொண்டு குஜராத்திலும் ஆம் ஆத்மியின் தடத்தை பதிக்க கெஜ்ரிவால் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள தாஹோத் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கெஜ்ரிவால், "டெல்லி அரசு ராம பக்தர்களுக்காக அயோத்தி வரை இலவச சிறப்பு ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. அயோத்தி சென்று டெல்லி திரும்பிய ராம பக்தர்கள் என்னை மனதார ஆசிர்வதிக்கின்றனர். அடுத்தாண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக தயாராகிவிடும். உங்கள் அனைவருக்கும் ராமரை தரிசிக்க ஆசை இருக்கும். ஆனால் நீங்கள் குடும்பத்துடன் சென்று தங்கி சாப்பிட்டு வந்தால் அதன் செலவு மிக ஜாஸ்தியாக இருக்கும்.

  இதையும் படிங்க: வயிற்றில் உபகரணத்தை வைத்து அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சியத்தால் 5 ஆண்டுகள் அவஸ்தைபட்ட பெண்..

  எனவே, குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், நாங்கள் அயோத்திக்கு இலவச தரிசன திட்டத்தை செயல்படுத்துவோம்" என்றார். டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சராக இருந்த ராஜேந்திர பால் புத்த மத நிகழ்வில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் சுமார் 10,000 பேர் புத்த மதத்தை தழுவி,  இந்து மத நம்பிக்கை, சடங்குகளுக்கு எதிராக அம்பேத்கர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகளை கூறினர்.  இந்த நிகழ்வை தொடர்ந்து முதலமைச்சர் கெஜ்ரிவால், அமைச்சர் ராஜேந்திர பால் ஆகியோர் இந்து விரோத செயல்களை செய்து வருவதாக தொடர் அழுத்தத்தை பாஜக செய்துவந்தனர்.

  மேலும், குஜராத் மாநிலத்தில் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், கெஜ்ரிவால் ஒரு இந்து விரோதி என பாஜக சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டன. பாஜகவின் தொடர் அழுத்தத்தை அடுத்து ராஜேந்திர பால் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்த சர்ச்சையின் பின்னணியில் தற்போது அயோத்திக்கு இலவச பயணத் திட்டத்தை குஜராத்தில் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Ayodhya, Gujarat