போரில் தோல்வியடைந்தவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் - பாக். மீது மோடி மறைமுக தாக்கு

"நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது"

news18
Updated: July 28, 2019, 7:07 AM IST
போரில் தோல்வியடைந்தவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் - பாக். மீது மோடி மறைமுக தாக்கு
கார்கில் வெற்றி விழா நினைவு தினத்தில் மோடி (PTI)
news18
Updated: July 28, 2019, 7:07 AM IST
போரில் தோல்வியடைந்தவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக, பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளார். எந்த நிலையிலும், நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 20ஆம் ஆண்டு விழா, நேற்று டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, கார்கில் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானது அல்ல என்றும் அது நாட்டின் வெற்றி என்றும் குறிப்பிட்டார். வீரர்களின் தியாகத்தால் நாடு பெரும் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில், தாம் கார்கில் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து தேசியக் கொடியை உயரப் பறக்கச் செய்ய வீரர்கள் தீரத்துடன் போராடியதைக் கண்டதாக தெரிவித்தார்.
Loading...கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு படைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக மோடி கூறினார். சில நாடுகள் பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாக, பாகிஸ்தானை மறைமுகமாக குற்றஞ்சாட்டிய அவர், போரில் தோல்வியடைந்தவர்கள், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்று பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று திட்டவட்டமாக தெரிவித்த மோடி, சர்வதேச அளவில் போர்க்கள சூழல் மாறி உள்ளதால் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை முக்கிய நோக்கமாக மத்திய அரசு கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும், விண்வெளி போரிலும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...