ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடியரசுத் தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் : மாயாவதி

குடியரசுத் தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் : மாயாவதி

தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குடியரசு தலைவர் பதவி அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

  நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 12.7 சதவீத வாக்குகளை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெற்றது. 15 ஆண்டுகளுக்கு முன்பு 206 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த அக்கட்சிக்கு தற்போது ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே உள்ளனர்.

  தலித் வாக்குகளை பிரித்து, உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு மாயாவதி காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இதற்கு பதிலாக, மாயாவதிக்கு குடியரசு தலைவர் பதவி வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் அளிக்கப்படும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின.

  இதையும் படிங்க - இது முகக்கவசமா? தாடியா? - சுரேஷ் கோபியை பார்த்து கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு..

  இதுகுறித்து பேசிய மாயாவதி, ‘குடியரசுத் தலைவர் பதவியை பெற்றுக் கொண்டால் அத்துடன் எனது கட்சியின் கதை முடிந்து விடும். அப்படியிருக்கையில் நான் எப்படி குடியரசு தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வேன்? பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். பாஜக அல்லது எந்தக் கட்சியும் எனக்கு குடியரசு தலைவர் பதவி அளித்தால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

  இதையும் படிங்க - ''ஆம் ஆத்மி வளர்ச்சியை பார்த்து பாஜக பயந்துவிட்டது'' - டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தாக்கு

   நடந்து முடிந்த தேர்தலில் எனக்கும் கட்சிக்கும் எதிராக பல சதிகள் நடந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியமைக்காவிட்டால் அவருக்கு குடியரசு தலைவர் பொறுப்பு அளிக்கப்படும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக மக்களிடையே பொய்யை பரப்பியுள்ளன. நான் குடியரசு தலைவர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்’ என்று தெரிவித்தார். தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: BSP, Mayawati