ஆந்திர அரியணையை இந்தமுறை பிடிப்பாரா ஜெகன் மோகன் ரெட்டி?

ஜெகன் மோகன் ரெட்டி

இந்த முறை அமராவதி முழுவதும் தங்களின் கொடி பறக்க வேண்டும் என்றும் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க வேண்டும் என்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் கடும் போட்டியிட்டு வருகின்றனர். 

ஆந்திர மாநிலத்தில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது.

அங்குள்ள 175 சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் வெளியிட்டிருந்தார். மேலும், தான் தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ள புலிவேந்துலா தொகுதியிலேயே வரும் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

கடப்பா மாநிலம் புலிவேந்துலா தொகுதியில் 1978-ம் ஆண்டு முதல் ஒய்.எஸ்.ஆர் குடும்பம் 10 முறை வெற்றி பெற்று தங்களது கோட்டையாக வைத்திருக்கிறது.

ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, புலிவேந்துலா தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். மக்களவைத் தொகுதியான கடப்பாவில் 4 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார். அவரை தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களான விவேகானந்தா 2 முறையும், விஜயம்மா மற்றும் ஜெகன் ஒருமுறையும் வென்றுள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி, புலிவேந்துலா தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், வரும் மக்களவைத் தேர்தலிலும் தங்கள் கோட்டையான புலிவேந்துலா தொகுதியிலே போட்டியிடுகிறார். கடப்பா மக்களவை தொகுதியில், அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிக நெருக்கமான வட்டத்தில் முதல்வர் பதவியை ஜெகன் மோகன் சந்திரபாபு நாயுடுவிடம் பறிகொடுத்தார்.

இந்த முறை அமராவதி முழுவதும் தங்களின் கொடி பறக்க வேண்டும் என்றும் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க வேண்டும் என்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Also See..

Published by:Mari S
First published: