தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா? அல்லது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

covid vaccinne

3வது அலை மற்றும் கொரோனா வைரஸின் புதிய அலையை டெல்டா திரிபு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் 2வது அலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3வது அலை குறித்த பயம் மக்களிடையே பரவலாக உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கனிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இதில் 50 விழுக்காடு பாதிப்பு டெல்டா வைரஸால் உருவாகியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 3வது அலை மற்றும் கொரோனா வைரஸின் புதிய அலையை டெல்டா திரிபு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரை டெல்டா வைரஸ் டபுள் மியூட்டன்ட் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது E484Q மற்றும் L452R ஆகிய இரண்டு பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இந்த திரிபுகள் கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் தோன்றி நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. அதன் பிறகு, இது மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதில் இருந்து உருவாகியிருக்கும் டெல்டா பிளஸ் திரிபு அடுத்த அலையை உருவாக்கும் என இந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் நம்புகின்றனர். அதனால், புதிய அலையில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? இப்போது நடைமுறையில் இருக்கும் தடுப்பூசிகள் 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா? அல்லது இன்னொருமுறை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா? போன்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

Also Read: கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்துடன் ஆப்கனை விட்டு தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனி – புதிய தகவல்கள்

தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக எப்படி வேலை செய்கின்றன?

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இருக்கும் திரிபுகளுக்கு இவை ஏற்றவையாக இருந்தாலும், புதிய திரிபுகளை கட்டுப்படுத்துவதில், தடுப்பூசியின் பங்கு குறித்து அறிய பொறுத்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் பி1 ஆல்பா மற்றும் டெல்டா வகைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியவையாக உள்ளன. காமா, பீட்டா வகைகளும் பதிவாகியிருந்தாலும், அதனால் பரவல் விகிதம் குறைவாக உள்ளது. டெல்டா திரிபே அதிக பரவல் விகிதத்தையும் அதிக பாதிப்பையும் கொண்டுள்ளது. ஆனால், இதிலிருந்து தப்பிக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரை நான்கு திரிபுகளுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு நல்ல ரிசல்டை கொடுத்துள்ளன.

இங்கிலாந்தைப் பொறுத்த வரை பைசர் தடுப்பூசி B.1.617.2 திரிபுக்கு எதிராக 87.9 % ரிசல்டையும், AstraZeneca தடுப்பூசி 59.8% ரிசல்டையும் கொடுத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. B.1.1.7 திரிபுக்கு எதிராக பைசர் 93%, ஆஸ்டிரா ஜென்கா 66% வீரியமாக செயல்படுகிறது. இரண்டு டோஸ் தடுபூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த ரிசல்ட் பொருந்தும். இரண்டு தடுப்பூசிகளிலும் ஒரு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் மத்தியில் 33 % மட்டுமே பாதுகாப்பை வழங்குகிறது.

Also Read: 3 மாத பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன் – அதிர்ச்சி சம்பவம்

ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் முழுமையான பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று கூறினாலும், குறிப்பிடத்தகுந்த பாதுகாப்பை வழங்கியிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்திய விமானப் போக்குவரத்து துறை வெளியிட்ட ஆய்வு ஒன்றில், விமானத்துறையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் 93% பாதிப்பு குறைந்ததாக தெரிவித்துள்ளது. இறப்பு விகிதத்தை 98 % குறைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நேஷன் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி நடத்திய ஆய்வில், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடையே கொரோனா பாதிப்பு மிக மிக குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், VOC B.1351 மற்றும் B.1.617.2 ஆகிய திரிபுகளுக்கு எதிராக நல்ல ரிசல்டை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள என்.ஐ.வி, டெல்டா வேரியண்டுக்கு எதிராகவும் பாசிடிவ்வான முடிவுகளை கொடுத்துள்ளதாக நம்பிக்கை அளித்துள்ளது. அதேநேரத்தில் நாம் செலுத்திக் கொள்ளும் தடுப்பூசி எவ்வளவு நாட்கள் பாதுகாப்பு அளிக்கும் என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட ஆய்வுகளில், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால், தடுபூசியால் கிடைக்கும் பாதுகாப்பு அதிக காலத்துக்கு இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: காபுல் பயங்கரம்: விமானத்தில் தொங்கியபடி பயணித்தவர்கள் கீழே விழுந்து பலி – அதிர்ச்சி வீடியோக்கள்!

பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டிருந்தாலும், நிலைமையின் வீரியத்தைப் பொறுத்து, முன்பு செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் இன்னொரு டோஸ் போட்டுக்கொள்ள வேண்டிய தேவை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தடுப்பூசியின் உற்பத்தியைப் பொறுத்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது குறித்து அரசுகள் முடிவெடுக்கும். தற்போது உலகளவில் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. எந்தவொரு நாடும் முழுமையாக தடுப்பூசியை செலுத்தவில்லை. அதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பரிந்துரைத்தால் மேலும் தடுப்பூசி தட்டுபாடு அதிகரிப்பதுடன், முதல் டோஸ் எடுத்துக்கொள்ளாதவர்களின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியதாக மாறும். ஆனால், பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை எழலாம்.

என்ன செய்ய வேண்டும்?

நம்மை தற்காத்துக்கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே இருக்கிற கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். முறையாக மாஸ்க் அணிவது முதல் கைகளை சுத்தமாக கழுவுவது வரை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளும் அதே வேளையில், தேவை கருதி மட்டுமே பொது வெளிக்கு செல்ல வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால், 3வது அலை பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. முன்பு இருந்த திரிபுகளைவிட டெல்டா வேரியண்ட் மிக மிக வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், அவை முழுமையான பாதுகாப்பை கொடுக்காது. பாதிப்பின் தீவிரத்தை மட்டுமே குறைக்கும் ஆற்றல் இருப்பதால், தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 2வது அலை ஏற்படுத்திய பாதிப்பின் வடுக்கள் இன்னும் அகலவில்லை என்பதை மக்களாகிய நாம் உணர்ந்து, நம்மையும், சுற்றுப்புறத்தினரையும் பாதுகாக்க வேண்டும்.

கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களிடம், அதன் தீவிரத்தையும், விளைவுகளையும் எடுத்துரைக்க வேண்டும்.
Published by:Arun
First published: