கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா? வல்லுனர்கள் விளக்கம்

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா? வல்லுனர்கள் விளக்கம்

மாதிரிப் படம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் பலரது மனதிலும் இருந்துவருகிறது. இதுகுறித்து வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுநோயால் புதிதாக பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை குறைந்து வருவது, பரவிக் கொண்டிருக்கும் தொற்றுநோயை இந்தியா விரைவில் சமாளிக்கும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளது. இருப்பினும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சம் இன்னும் உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையின் வீழ்ச்சிக்கு பின்னணியில் இருக்கும் குறிப்பிட்ட காரணங்கள் குறித்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பேசவில்லை என்றாலும், குழுவின் உறுப்பினர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் குளிர் காலநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து “இரண்டாவது அலை” பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் இருக்கும் தற்போதைய சரிவு சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பா உட்பட பல நாடுகள் அனுபவித்ததைப் போன்றது என்று குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும் அவர், இத்தாலியை உதாரணம் காட்டி, " அந்த நாட்டில் கொரோனா வைரஸின் பாதிப்பு அவ்வளவு ‘பரவலாக’ மாறவில்லை.

அது ஒருவரின் "மந்தை நோய் எதிர்ப்பு சக்தி" பொறுத்து அமைந்தது. இதனால், இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் விரைவாக குறைந்துவிட்டன. ஆனால் தொடர்ந்து இரண்டாவது எழுச்சி உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தியா கவனமாக இருந்து வைரஸ் அலைகளை நிர்வகிக்க முடிந்தால், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வழியாக அனைத்து மாநிலங்களும், பிராந்தியங்களும் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது" என்று அகர்வால் கூறினார். இந்தியா விரைவில் சிறந்த நிலைமைக்கு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ககன்தீப் காங் கூறியதாவது, பண்டிகைகளுடன், அடுத்த குளிர்காலம் மற்றும் காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு ஆகியவை கொரோனா பரவல் குறித்த கவலைக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று கூறினார். கொரோனா தொற்றுநோய்க்கும் குளிர்ந்த காலநிலைக்கும் உள்ள தொடர்பு இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பிற வகையான தொற்று நோய்கள் மற்றும் வைரஸ்கள் பரவுவதற்கு பருவநிலையும் காரணமாக இருக்கும்.

Also read... #BREAKING | இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி..குளிர்ந்த காலநிலையின் போது பிற வகை வைரஸ்கள் பரவிய அனுபவத்தின் அடிப்படையில், குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று அவர் கூறினார். இதுதவிர, காற்று மாசுபாடு வைரஸ் பரவல் குறித்த கவலைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்பதால் இந்திய மக்களும் அதிகாரிகளும் கவனமாக இருக்க வேண்டும். மாசுபட்ட காற்று ஏற்கனவே சுவாச நோய்களுக்கு ஒரு பெரிய காரணியாக மாறியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் விஷயங்களை மேலும் சிக்கலாக்கும் என்று அவர் கூறினார்.

இதையடுத்து பேராசிரியர் அகர்வால் கூறியதாவது, ஒரு தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் "சூப்பர்-ஸ்ப்ரெடர்ஸ்" -க்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்ப்ரெடர்கள் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான நபர்களை பாதிக்கும் தனிநபர்கள் ஆவர். இந்த சூப்பர் ஸ்ப்ரெடர்கள் ஏற்கனவே தொற்றுக்கு ஆளாகியிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், அது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆக மாறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: