காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவோம்: ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாள் தோறும் அதிரடி வாக்குறுதிகளை ராகுல்காந்தி வழங்கி வருகிறார்.

Web Desk | news18
Updated: April 1, 2019, 7:52 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவோம்: ராகுல் காந்தி
ராகுல்காந்தி
Web Desk | news18
Updated: April 1, 2019, 7:52 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பக்கத்தில், ‘‘2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிக் காட்டுவோம். மத்திய அரசிடமிருந்து மாநிலங்களில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு சென்றடைய வேண்டிய நிதியை சரியாக பகிர்ந்தளிப்பதன் மூலம், மாநில அரசுத்துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது உறுதி செய்யப்படும்’’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Loading...


மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் அதிரடி வாக்குறுதிகளை ராகுல்காந்தி வழங்கி வருகிறார். வறுமை ஒழிப்புக்காக ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் 72,000 ரூபாய் வழங்கப்படும் என ராகுல் அறிவித்திருந்த நிலையில், அரசு வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... தெய்வம்தான் எங்களுக்கு இந்த பதவியை கொடுத்தது - எடப்பாடி பழனிசாமி
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...