• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கண்ணை பிடுங்கி எறிந்து, கையை வெட்டிவிடுவேன் - ஹரியானா பாஜக எம்.பி ஆவேசம்

கண்ணை பிடுங்கி எறிந்து, கையை வெட்டிவிடுவேன் - ஹரியானா பாஜக எம்.பி ஆவேசம்

BJP MP Arvind Sharma

BJP MP Arvind Sharma

கண்களை பிடுங்கிவிடுவேன், கைகளை வெட்டிவிடுவேன் என ஆவேசமாக பேசினார். எம்.பி அரவிந்த் இப்படி பேசியபோது அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

  • Share this:
பாஜக மூத்த தலைவர் மனீஷ் குரோவருக்கு எதிராக நடந்துகொள்பவர்களின் கண்ணை பிடுங்கி, கையை வெட்டிவிடுவேன் என பாஜக எம்.பி அரவிந்த் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். ஹரியானா முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மனீஷ் குரோவர், கோவில் வளாகத்தில் நேற்று சிறைவைக்கப்பட்ட சம்பவத்தில் அவருக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் எம்.பி அரவிந்த் இவ்வாறு பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் திரண்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்கியிருக்கிறது. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே இந்த போராட்டத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.

Also read:  பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்த 22 மாநிலங்கள்.. வரியை குறைக்காத மாநிலங்கள் எவை?

கோவிலில் சிறைவைக்கப்பட்ட பாஜகவினர்:

பாஜக தலைவர்கள் எங்கு சென்றாலும் அங்கு சென்று போராட்டம் நடத்துவது, எதிர்ப்பு தெரிவிப்பது என்பதை தங்களின் போராட்டத்தின் ஒரு அங்கமாக விவசாயிகள் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தின் கிலோய் எனும் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு மனீஷ் குரோவர் பாஜக பிரமுகர்களுடன் சென்றிருந்தார். நேற்றைய தினம் கேதார்நாத் கோவிலில் நிறுவப்பட்டுள்ள ஆதிசங்கரரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்வை கிலோய் கிராமத்தில் இருந்த கோவிலில் இருந்தபடி பாஜக தலைவர்கள் காணொளி காட்சி மூலம் பார்வையிட்டனர்.

8 மணிநேரம் சிறைவைப்பு:

இதனை அறிந்து விவசாயிகள் அங்கு பெருமளவில் சென்றனர். பாஜக தலைவர் மனீஷ் குரோவர், விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருப்பதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்கும் வரை அவரை வெளியேவிட மாட்டோம் எனவும் கூறி முற்றுகையிட்டனர். இதனால் சுமார் 8 மணிநேரங்களுக்கு குரோவர் உள்ளிட்டவர்கள் அங்கேயே இருந்தனர்.

Also read:  நியூசிலாந்தையும் விட்டுவைக்காத டெல்டா வகை கொரோனா.. தினசரி பாதிப்பு புதிய உச்சம்..

பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மூலம் அங்கிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். ஆனால் வெளியே வந்த குரோவர், தான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை எனவும், நான் எப்போது வேண்டுமானாலும் இந்த கோவிலுக்கு வருகை தருவேன் எனவும் கூறிச்சென்றார். ரோஹ்தக் மேயர், மற்றொரு அமைச்சர் உள்ளிட்டவர்களும் நேற்று சிறைவைக்கப்பட்டிருந்தனர்.



இந்நிலையில், மனீஷ் குரோவருக்கு ஆதரவாக ரோஹ்தக் தொகுதி பாஜக எம்.பி அரவிந்த் சர்மா இன்று கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆதரவாளர்களிடையே பேசுகையில், மனீஷ் குரோவரை எதிர்ப்பவர்களின் கண்களை பிடுங்கிவிடுவேன், கைகளை வெட்டிவிடுவேன் என ஆவேசமாக பேசினார். எம்.பி அரவிந்த் இப்படி பேசியபோது அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. எம்.பி அரவிந்த் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்.

முன்னதாக நேற்று காலை விவசாயிகள் பாஜகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ராம் சந்தர் ஜாங்க்ராவின் கார் கண்ணாடியை உடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: