Home /News /national /

என் ரத்தத்தையும் கொடுத்து மாநிலத்தைக் காப்பேன், பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது- மம்தா பானர்ஜி ஆவேசம்

என் ரத்தத்தையும் கொடுத்து மாநிலத்தைக் காப்பேன், பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது- மம்தா பானர்ஜி ஆவேசம்

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

வங்காளத்தை மேலும் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பானர்ஜி செவ்வாயன்று என்று திட்டவட்டமாகக் கூறினார், சமீபத்தில் தனி மாநில கோரிக்கையை எழுப்பிய வடக்கு வங்காளத்தில் அடையாள அடிப்படையிலான அரசியல் அமைப்புகளுக்கு முதல்வர் மம்தா விடுக்கும் எச்சரிக்கையாகும்.

மேலும் படிக்கவும் ...
    வங்காளத்தை மேலும் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பானர்ஜி செவ்வாயன்று என்று திட்டவட்டமாகக் கூறினார், சமீபத்தில் தனி மாநில கோரிக்கையை எழுப்பிய வடக்கு வங்காளத்தில் அடையாள அடிப்படையிலான அரசியல் அமைப்புகளுக்கு முதல்வர் மம்தா விடுக்கும் எச்சரிக்கையாகும்.

    “எனது இரத்தத்தைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் வங்காளத்தைப் பிரிக்க விடமாட்டேன்” என்று அலிபுர்தார் நகரில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பேசுகையில் கூறினார்.

    முதலமைச்சரின் வடக்கு வங்காளப் பயணத்திற்கு முன்னதாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான கம்தாபூர் விடுதலை அமைப்பின் தலைவர் ஜீவன் சிங்காவின் செய்தியுடன் கூடிய வீடியோ கிளிப் வெளிவந்தது. அந்த வீடியோவில், தனி கம்தாபூர் மாநிலத்தை எதிர்க்க வேண்டாம் என்று மம்தாவிடம் சிங்கா எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளார். சில ஆயுதம் ஏந்திய நபர்களும் வீடியோவில் காணப்பட்டனர்.

    இந்த நிலையில்தான் மம்தா, “தலைவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். நீங்கள் என்னை துப்பாக்கி முனையில் நிறுத்தலாம் ஆனால் நான் இத்தகைய துப்பாக்கிகள் பலவற்றை பார்த்தவள், அவற்றை தூக்கி எறிய எனக்கு நேரம் அதிகம் தேவைப்படாது என்று எச்சரிக்கிறேன்” என்றார் மம்தா.

    அண்டை மாநிலமான அஸ்ஸாமின் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது அரசு தடைசெய்யப்பட்ட KLO தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருவதாக டிசம்பரில் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

    மாறாக மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் அரசு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் நமக்கென்ன பேச்சுவார்த்தை என்று கேள்வி எழுப்பி வருகிறது. அசாம் பாஜக அரசு ஏன் தீவிரவாத அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று திரிணாமூல் கேள்வி எழுப்புகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடக்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தனி வடக்கு வங்காள மாநிலம் கோரி வருகின்றனர்.

    பாஜக தலைவர்களுடன், ராஜ்பன்ஷிகளின் ஆதரவைக் கொண்ட வேறு சில பிராந்திய அரசியல் கட்சிகளும் தனி மாநிலத்திற்கான தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் மம்தா பானர்ஜி தன் நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக கூறியிருப்பதாக வங்காள அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Mamata banerjee

    அடுத்த செய்தி