ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் : ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு

மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

news18
Updated: March 25, 2019, 3:00 PM IST
ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் : ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு
ராகுல் காந்தி
news18
Updated: March 25, 2019, 3:00 PM IST
நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள 20% ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா 72 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார்

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதால், 25 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றார். இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

மேலும், குறைந்தபட்ச மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் எனக் கூறிய ராகுல் காந்தி, உலகிலேயே இதுவரை இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை என்றார்.
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...