ஹோம் /நியூஸ் /இந்தியா /

அனைத்து வாக்குறுதிகளையும் விரைவாக நிறைவேற்றுவோம் - இமாச்சல மக்களுக்கு ராகுல் உறுதி

அனைத்து வாக்குறுதிகளையும் விரைவாக நிறைவேற்றுவோம் - இமாச்சல மக்களுக்கு ராகுல் உறுதி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இமாச்சலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னின்று நடத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Himachal Pradesh, India

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்று பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் 40 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜகவால் 25 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 3 இடங்களில் சுயேட்சை வென்றுள்ளனர்.

இதன் மூலம் நீண்ட காலத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஒன்றில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதலமைச்சராக இருந்த ஜெய்ராம் தாக்கூர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதேவேளை அடுத்து முதலமைச்சரை தேர்வு செய்து ஆட்சி அமைக்கும் பணியை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த தேர்தல் வெற்றி குறித்து கட்சி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கார்கே தனது ட்விட்டர் பதிவில், "தேவபூமி இமாச்சலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தந்த சகோதார சகோதரிகளுக்கு கைக்கூப்பி எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக எங்களின் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்" என்றார். மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் தேர்தல் வெற்றிக்கு காரணம் என்ற கார்கே, சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் கட்சிக்கு உறுதியான வெற்றியை தந்த இமாச்சல மக்களுக்கு நன்றி. இதை சாத்தியமாக்கிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துகள். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் வேகமாக நிறைவேற்றுவோம் என உறுதி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்துள்ளனர் - அமித் ஷா கருத்து

இமாச்சலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னின்று நடத்தினார். தேர்தல் வாக்குறுதிகளாக பழைய ஓய்வூதிய திட்டம், பெண்களுக்கு ஊக்கத்தொகை, ஒரு லட்சம் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது.

First published:

Tags: Congress, Himachal Pradesh, Mallikarjun Kharge, Priyanka gandhi, Rahul gandhi