ஆம்! இவர் மனைவி , இடைப்பட்ட காலத்தில் இன்னொரு சீக்கியரைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை தன் செல்போனில் பார்த்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். இதைப்பார்த்து இனி வாழ்ந்து என்னபயன் என்று தற்கொலை செய்து கொள்வோம் என்ற எண்ணமும் தனக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார் ஷாகித் நசீர். ஆனால் அவருக்குள் ஒரு தைரியம் மூண்டது, ‘மீண்டும் என் மனைவியை நான் திரும்பப் பெறுவேன்’ என்று சூளுரைத்துள்ளார் ஷாகித் நசீர்.
ஜூன் மாதம் 5ம் தேதி ஷாகித் நசீர், 18 வயது சீக்கியப் பெண் மன்மீத்தைத் திருமணம் செய்து கொண்டார், அந்தப் பெண் சீக்கிய மதத்திலிருந்து முஸ்லீமாக மாறி தன் பெயரை ஜோயா என்று மாற்றிக் கொண்டார். இது பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த கலப்புத் திருமணம். 23ம் தேதி ஷாகித் நசீர், கடத்தல், திருமணத்துக்காக கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 21ம் தேதி மன்மீத்தின் தந்தை அளித்த புகாரின் படி ஷாகித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது காஷ்மீரில் பெரிய சர்ச்சைகளையும் பதற்றத்தையும் கிளப்பியது. பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் உட்பட லவ் ஜிகாத் புகார் எழுப்பினர்.
இதற்கிடையே ஷாகித் சிறை சென்றதையடுத்து மன்மீத்திற்கு இன்னொரு சீக்கியருடன் பெற்றோர் ஆசியுடன் திருமணம் நடத்தப்பட்டது. இதை சட்ட ரீதியாகச் சந்தித்து தன் மனைவியை மீட்பேன் என்கிறார் ஷாகித்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜூன் 22ம் தேதி இருவரும் பாரமுல்லாவிற்குச் சென்று தங்கள் திருமணத்தைப் பதிவு செய்துள்ளனர்.
“நான் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட என் காதல் மனைவியை என்னிடமிருந்து பிரித்து வலுக்கட்டாயமாக வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். எப்படி அவர்கள் இதைச் செய்ய முடியும், என் இதயம் நொறுங்கிப் போனது. சிறையிலிருந்து வந்தவுடன் என்மனைவியின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்தேன். எனக்கு ஆத்திரமும் அதே வேளையில் கையாலாகாத்தனமும் பீறிட்டது. கோர்ட்டில் என்னை அவர் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டார் என்ரு என் மனைவி கூறியுள்ளார். என் மனைவியை ஏமாற்றை இந்தத் திருமணத்தை செய்து வைத்துள்ளனர், இது நீதியா, நியாயமா?” என்று ஆங்கில ஊடகம் ஒன்றில் புலம்பியுள்ளார் ஷாகித்.
மன்மீத் தன் சொந்த விருப்பப்படியே ஷாகித்தை திருமணம் செய்து கொண்டதாக மன்மீத் கூறியதை போலீசாரும் உறுதி செய்தனர். ’என்னை என் மனைவி ஒருக்காலும் ஏமாற்ற மாட்டார், கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர், என் மனைவியின் கண்களில் காணும் வேதனையை பாருங்கள்’ என்கிறார் ஷாகித்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kashmir, Love marriage, Muslim