’ஒவ்வொரு நாளும் பாஜக-வை எதிர்ப்போம்’- நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் சூளுரை

கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

Web Desk | news18
Updated: June 1, 2019, 1:02 PM IST
’ஒவ்வொரு நாளும் பாஜக-வை எதிர்ப்போம்’- நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் சூளுரை
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: June 1, 2019, 1:02 PM IST
’தினம்தோறும் இனி பாஜக-வை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்’ என நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து கட்சியிலிருந்து பலர் வலியுறுத்திய போதும் தலைவர் பதவி ஏற்க ராகுல் காந்தி மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த  கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி தன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் புதிய எம்.பி-க்கள் உடன் இணைந்து பேசினார்.


அப்போது ராகுல் கூறுகையில், “நமக்கு நாடாளுமன்றத்தில் தற்போது 52 உறுப்பினர்கள் உள்ளனர். நாம் அனைவரும் இணைந்து தினம்தோறும் பாஜக-வை எதிர்ப்போம்” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “முதலில் நாம் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்காகவும் நாம் போராடுகிறோம். வெறுப்பும் கோபமும் நம்மை எதிர்க்கும். ஆனால், நாம் இன்னும் அதிக பலத்துடன் போராட வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் பார்க்க: டெல்லியில் கொளுத்தும் வெயில்... அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கை...!
First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...