• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • என் மனைவி மீதே குற்றச்சாட்டா.. நவாப் மாலிக்கின் நிகழ் உலக தொடர்புகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன் - தேவேந்திர பட்னாவிஸ்

என் மனைவி மீதே குற்றச்சாட்டா.. நவாப் மாலிக்கின் நிகழ் உலக தொடர்புகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன் - தேவேந்திர பட்னாவிஸ்

Devendra fadnavis

Devendra fadnavis

நவாப் மாலிக்கின் மருமகன் சமீர், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். அப்படியென்றால் மாலிக் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி முழுதும் போதைப் பொருள் கடத்தல் மாஃபியா கூட்டமா?

  • Share this:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக்கின் நிழல் உலக தொடர்புகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன் என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை கடல்கரைப் பகுதியில் உல்லாச கப்பலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு போதை மருந்துகளை கடத்திச் சென்று பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் போதைப் பொருள் தடுப்பு முகமையால் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், கைது நடவடிக்கைக்கு காரணமாக இருந்த போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது தொடர்ந்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக். மேலும் இந்த வழக்கு அரசியல் ரீதியிலான ஒன்றாகவும் மாறியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் சிறையில் உள்ள ஜெய்தீப் ரானா, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கும் நவாப் மாலிக், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேவேந்திர பட்னாவிஸுக்கும், அவருடைய மனைவி அம்ரிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து உச்சபட்ச பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Also read:   அயோத்தி ராமர் கோவிலுக்காக ஆப்கன் பெண்ணால் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட காபுல் நதி நீர்!

இதனிடையே நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதாவது, “நவாப் மாலிக் பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறார். அவர் குறும்புத்தனமாக என்னையும், என் மனைவியின் பெயரையும் ஒரு தனிநபருடன் சேர்த்து போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.

Fadnavis - Nawab malik


மாலிக் ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டார், இந்த ஆட்டத்தில் ஒரு சிறப்பான முடிவு கிடைப்பதை நான் உறுதி செய்வேன். தீபாவளிக்கு பின்னர் ஒரு குண்டை நான் போடுவேன்.

நவாப் மாலிக்கின் நிழல் உலக தொடர்புகள் அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்துவேன். அந்த ஆதாரங்களை கட்சித் தலைவர் சரத் பவாரிடம் சேர்ப்பேன்.

Also read:   2020ல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை தற்கொலை – தேசிய குற்ற ஆவண பாதுகாப்பகம் அதிர்ச்சித் தகவல்

ஜெய்தீப் ரானாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக மாலிக் கூறுகிறார். நான் முதல்வராக இருந்த போது நதிகளை புணரமைக்கும் அமைப்பு ஒன்று ரிவர் மார்ச் என்ற குறும்படத்தில் நானும், எனது மனைவியும் தோன்ற வேண்டும் என கேட்டுக்கொண்டது. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது. அன்று பலரும் எங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் மாலிக் ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை மட்டும் காட்டி அபாண்டமாக பேசுகிறார்.

அவர் கூறுவதைப் போல கூறவேண்டுமென்றால், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய மருமகன் சமீர், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். அப்படியென்றால் மாலிக் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி முழுதும் போதைப் பொருள் கடத்தல் மாஃபியா கூட்டமா? ஆனால் நான் அப்படியெல்லாம் கேட்கமாட்டேன்.” இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: