Home /News /national /

பெங்களூரு வெள்ளத்துக்கு காரணமான 700 ஆக்கிரமிப்புகள்.. அகற்றும் பணிகளில் தீவிரம் காட்டும் அரசு

பெங்களூரு வெள்ளத்துக்கு காரணமான 700 ஆக்கிரமிப்புகள்.. அகற்றும் பணிகளில் தீவிரம் காட்டும் அரசு

பெங்களூருவில் அக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்

பெங்களூருவில் அக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்

பெங்களூருவில் உள்ள 700க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை கர்நாடகா அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India
    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இடைவிடாது கனமழை பெய்ததால் பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஐடி நிறுவனங்கள் ரூ.225 கோடி மதிப்பில் இழப்புகளை சந்தித்துள்ளது.கனமழை வெள்ளம் காரணமாக பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் கூட தடைபட்டுள்ளது.

    முறையான திட்டமிடல் இன்றி நகரத்தை கட்டமைக்காதது, குறிப்பாக மரங்களை அழித்ததும் முறையான வடிகால் வசதிகள் மேற்கொள்ளததுமே இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் என சூழியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், மழை ஓய்ந்த கையோடு இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கர்நாடகா அரசு அதிரடி நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளது.

    மழை வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புக்கள் தான் பிரதான காரணம் என்று கூறப்படும் நிலையில், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் பணிகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. அங்குள்ள சுமார் 700க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் வெள்ள வடிகாலுக்கு தடையாக இருந்துள்ளதாக நகராட்சி அமைப்பு கண்டறிந்துள்ளது. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் வேலையில் அரசு களமிறங்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஒரு மொழிக்கு மட்டும் ஏன் தனி முக்கியத்துவம்.. கர்நாடகாவில் இந்தி தின கொண்டாட்டத்திற்கு குமாரசாமி எதிர்ப்பு

    அரசின் நடவடிக்கை குறித்து அம்மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா கூறுகையில்,"அடுத்த பருவ மழைக்கு முன்னதாக ஆக்கிரமிப்புகள் அற்ற பகுதியாக பெங்களூருவை மாற்றுவோம். 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் 13-14 ஏரிகளில் கட்டடம் கட்ட அன்றைய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுவே பிரச்னைக்கு பிரதான காரணம். எனவே ஆக்கிரமிப்புகளை முறைப்படி துரிதமாக அகற்றுவோம். நொய்டாவில் இரட்டை கோபுரம் அகற்றப்பட்டது போல அனைத்து சட்டவிரோத கட்டடங்களையும்" அகற்றுவோம் என்றுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bengaluru, Encroachment, Karnataka

    அடுத்த செய்தி