தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தேவையில்லாமல் பேசினால் நாக்கை நாலு துண்டாக வெட்டிவிடுவேன் என பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய்க்கு, மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரான சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக தன்னை முக்கிய கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.5 மற்றும் ரூ.10 ஆகவும் குறைத்திருக்கிறது மத்திய அரசு. மேலும் மாநில அரசுகளும் தனது நடவடிக்கையை பின்பற்றி மக்களுக்கு பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரியது. இதனையடுத்து பெரும்பாலான பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைத்திருப்பதால் 23 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறைந்திருக்கிறது. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசும் வாட் வரியை குறைத்துள்ளது.
இதனிடையே தெலங்கானா, கேரளா, தமிழகம் உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியை இன்னும் குறைக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறும், விவசாயிகளிடமிருந்து அரிசியை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர் சஞ்சய் அறிவித்துள்ளார். மேலும் அவர் அரசையும் விமர்சித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ், பாஜகவின் சஞ்சய்க்கு பதிலடி தந்து பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடையே சந்திரசேகர் ராவ் பேசுகையில், “உங்கள் மலிவான அரசியலுக்காக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது. மீறி பேசினால் நாக்கை நாலு துண்டாக்கிவிடுவேன். வாட் வரியை குறைக்க சொல்ல பாஜகவுக்கு அருகதை கிடையாது. தெலங்கானா அரசு வாட் வரியை உயர்த்தியதே இல்லை என்பதால் வாட் வரியை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
Also read: பதவி பறிபோனால் போகட்டும்… மத்திய அரசை கடுமையாக எதிர்த்து பேசிய மேகாலயா ஆளுநர்..
மத்திய அரசு தான் செஸ் வரியை குறைக்க வேண்டும். வரியை உயர்த்திய முட்டாள் தான் அதை குறைக்கவும் வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பாஜகவினர் என்னை விமர்சிக்க உரிமை கொடுக்கிறேன். ஆனால் விவசாயிகளை ஏமாற்றக்கூடாது. அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. டெல்லியில் உள்ளவர்கள் ஒன்று பேசுகிறார்கள், இங்குள்ளவர்கள் போலியான நம்பிக்கையை விவசாயிகளுக்கு கொடுக்கிறார்கள். தெலங்கானா அரசு கொள்முதல் செய்து வைத்திருக்கும் அரசியை முதலில் மத்திய அரசை கொள்முதல் செய்யச் சொல்லுங்கள் என விவசாயிகளிடம் நெல் விவசாயத்தில் ஈடுபட வேண்டாம் என ஆளும் அரசு தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினருக்கு விளக்கம் அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Chandrasekar rao, Telangana