”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராகப் பேசுபவர்களை உயிரோடு எரிக்க வேண்டும்” என உத்தரபிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அலிகார் நகரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரகுராஜ் சிங் மற்றும் அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் ரகுராஜ், “பொடா சட்டத்தின் கீழ் நீங்கள் எல்லோரும் சிறைக்குச் செல்லப் போகிறீர்கள். உங்கள் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். வரி செலுத்துவோரின் பணத்தில் படித்துவிட்டு இன்று முதல்வர் யோகிக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகப் பேசி வருகிறார்கள். நீங்கள் எல்லோரும் உயிருடன் எரிக்கப்படுவீர்கள். இன்று மாதிரியே என்றும் மோடியும் யோகியும் ஆட்சி செலுத்துவார்கள்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடுதலாக அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புப் படையினரிடம் அதிகப்படியான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பார்க்க: எச்சரிகையை மீறி CAA-க்கு எதிரான போராட்டத்தில் அலிகார் பல்கலை. மாணவர்கள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh