முகப்பு /செய்தி /இந்தியா / ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை அமித் ஷா நடந்து காட்டுவாரா..? ராகுல் காந்தி சவால்

ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை அமித் ஷா நடந்து காட்டுவாரா..? ராகுல் காந்தி சவால்

ராகுல் நடைபயணம்

ராகுல் நடைபயணம்

ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் திட்டமிட்ட படுகொலைகள், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்கிறார். கடந்த 145 நாட்களாக சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு பாதயாத்திரை மேற்கொண்ட ராகுலின் இந்த நெடும் பயணம், இறுதியாக நேற்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரை அடைந்தது.

ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஒற்றுமை நடை பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். இதில் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் மக்களின் மனநிலை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரின் சூழலை பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக எனது நடைபயணம் முழுவதும் சோகத்தையே உணர்ந்தேன். இன்னும் பல இடங்களில் திட்டமிட்ட படுகொலைகள், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பாஜகவினர் கூறுவது போல நிலைமை சீராக இருந்தால் அவர்கள் ஏன் ஜம்முவில் இருந்து லால் சவுக் வரை நடைபயணம் செய்யக்கூடாது.

பாதுகாப்பு பலமாக இருக்கிறது என்றால் அமித் ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை நடந்து காட்டுவாரா என சவால் விடுக்கும் தொனியில் ராகுல் காந்தி கேள்வி  எழுப்பினார். எதிர்க்கட்சிகள் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நிச்சயம் ஒன்றிணைவார்கள் என ராகுல் கூறினார். ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு விழா ஸ்ரீநகரில் இன்று மிக பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ள 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Amit Shah, Jammu and Kashmir, Rahul gandhi