மீண்டும் விமானத்தை இயக்குவாரா அபிநந்தன்?

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது

இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  போர் விமானத்தை இயக்கும் உடல்நிலை, மனநிலையில் அபிநந்தன் இருக்கிறாரா என சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

  இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் 21 ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தனை உடனே இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அபிநந்தனை கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் விடுவித்தது.

  இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது. அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் ராணுவம் உளவு பார்க்கும் கருவியை பொருத்தியிருக்கிறதா என்ற பரிசோதனையும் அபிநந்தனை உடல்ரீதியாக துன்புறுத்தி ராணுவ ரகசியங்கள் பெறப்பட்டனவா என்று விசாரணையும் நடைபெற்று வருகிறது.

  மேலும் போர் விமானத்தை இயக்கும் உடல்நிலை, மனநிலையில் அபிநந்தன் இருக்கிறாரா என சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையை பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோ ஸ்பேஸ் மெடிசன் அமைப்பு நடத்தவுள்ளது. அந்த அமைப்பு சான்று அளித்த பின்பே அபிநந்தன் மீண்டும் போர் விமானங்களை இயக்குவாரா இல்லையா என்பது தெரிய வரும். போர் விமானங்களை இயக்க ஏ1ஜி1 சான்றிதழ் பெறுவது அவசியமாகும். விபத்தினால் விமானியின் உடல் தகுதி பாதிக்கப்படும் என்பதால் அபிநந்தன் மீண்டும் சான்று பெற வேண்டியது அவசியமாயிற்று.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: