ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாஸ் எண்ட்ரி கொடுத்த காட்டு யானை.. மிரண்டு போன சுற்றுலா பயணிகள்

மாஸ் எண்ட்ரி கொடுத்த காட்டு யானை.. மிரண்டு போன சுற்றுலா பயணிகள்

காட்டு யானை

காட்டு யானை

சோதனை சாவடி வழியாக வெளியே வந்த காட்டு யானையால் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் அச்சமடைந்தனர்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலம் நாகர்கோலே  வனப்பகுதியில் இருந்து திடீரென சோதனை சாவடியில் வெளியே வந்த காட்டு யானையால் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் அச்சமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் நாகர்ஹோலே வடபகுதியில் நாள்தோறும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகாலை வேளையில் வனச் சோதனை சாவடி வழியே திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பிரதான சாலையில் ஓடியது.

வனப்பகுதியில் இருந்து செடி கொடிகளுடன் ஓடி வந்த காட்டு யானையை கண்ட வனத்துறையினர் கூச்சலிட்டனர்.  இதனையடுத்து காட்டு யானை பின்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

காட்டு யானை ஒன்று திடீரென சோதனை சாவடி வழியாக ஓடுவதை கண்டு வனத்துறை ஊழியர்களே சற்று அதிர்ச்சியடைந்தனர்.  காட்டு யானை வனத்துக்குள் சென்றவுடன் தான் வனத்துறையினரும் அச்சாலை வழியாக சென்ற சுற்றுலா பயணிகளும் நிம்மதி அடைந்தனர். யானை ஓடிவரும் இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தியாளர்: ஐய்யாசாமி

First published:

Tags: Elephant, Elephant routes, Karnataka, Tamil News