நடுரோட்டில் நீதிபதியின் மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி! - வீடியோ

நடுரோட்டில் நீதிபதியின் மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி! - வீடியோ
நீதிபதியின் மகனை காருக்குள் இழுத்துபோடும் மகிபால்.
  • News18
  • Last Updated: October 13, 2018, 7:18 PM IST
  • Share this:
ஹரியானா குருகிராமில் நீதிபதியின் மனைவியையும், மகனையும் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குர்கிராமில் உள்ள அர்காடியா சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காகக் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவின் மனைவியும் மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் இருந்த அவர்களின் பாதுகாப்பு அதிகாரி மகிபால், அவருடைய துப்பாக்கியால் நீதிபதியின் மனைவியை நோக்கி சுட்டுள்ளார்.

பின்பு நீதிபதியின் மகனை நோக்கி சுட்டு, அவரை அவர்கள் வந்த காருக்குள் இழுக்க முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை சாலையிலேயே போட்டுவிட்டு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார். பின்பு சதார் காவல் நிலையத்துக்கு சென்ற மகிபால் அங்கேயும் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளார். அவரை அங்கிருந்த போலீஸ் அதிகாரி பிடிக்க முயற்சித்தபோதும் அங்கிருந்து மகிபால் தப்பித்தார்.


ஆனால் சிறிது நேரம் கழித்து மகிபாலை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிக்கும் நீதிபதியின் மனைவி ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பித்து விட்டதாகவும், மகன் உயிருக்கு போராடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



கைது செய்யப்பட்டுள்ள மகிபாலிடம் விசாரணை நடந்துவருவதாக குருகிராம் போலீஸ் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மகிபால் நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவிடம் கடந்த ஒன்றரை வருடமாக பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading