காலையில் பாஜகவில் இணைந்து மதியம் விலகிய பிரபலம்!

தெலுங்கானா மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜநரசிம்ஹாவின் மனைவி பத்மினி ரெட்டி காலையில் பாஜகவில் இணைந்து பிற்பகலில் விலகினார்

news18
Updated: October 12, 2018, 3:14 PM IST
காலையில் பாஜகவில் இணைந்து மதியம் விலகிய பிரபலம்!
பத்மினி ரெட்டி
news18
Updated: October 12, 2018, 3:14 PM IST
தெலுங்கானாவில் மூத்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜநரசிம்மாவின் மனைவி பத்மினி ரெட்டி காலையில் பாஜகவில் இணைந்து பிற்பகலில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வராக இருந்தவர் தாமோதர் ராஜநரசிம்மா. தற்போது, தெலுங்கானா காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் அவரது மனைவி பத்மினி ரெட்டி சமூக ஆர்வலராக அறியப்படுகிறார். இந்நிலையில், நேற்று காலையில் திடீரென அம்மாநில பாஜக தலைவர் லக்‌ஷ்மனன் முன்னிலையில் பத்மினி பாஜகவில் இணைந்தார்.

‘பத்மினி இணைந்துள்ளது பாஜகவுக்கு பலம் சேர்க்கும். பெண்களுக்கு பாஜகவில் மோடி முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகிறார்’ என லக்‌ஷ்மனன் பேட்டியளித்த சில மணி நேரத்தில், பத்மினி கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்தார். ‘பாஜகவில் இணைந்தது என்னுடைய ஆதரவாளர்களுக்கு மிகுந்த வலியை அளித்துள்ளது. அதனால், விலகிவிட்டேன்’ என பத்மினி கூறியுள்ளார்.


கட்சியில் ஒருவர் இணைவதையோ, விலகிச்செல்வதையோ கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ள அம்மாநில பாஜக, பத்மினியின் முடிவுக்கு மதிப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
First published: October 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...