முகப்பு /செய்தி /இந்தியா / கள்ளக் காதலியின் கணவரை கடத்தி சிறுநீர் கழித்து மொட்டை அடித்த நபர்... ஆந்திராவில் கொடூரம்..!

கள்ளக் காதலியின் கணவரை கடத்தி சிறுநீர் கழித்து மொட்டை அடித்த நபர்... ஆந்திராவில் கொடூரம்..!

பாதிக்கப்பட்ட கணவரின் வைரல் வீடியோ

பாதிக்கப்பட்ட கணவரின் வைரல் வீடியோ

அப்பாவி கணவன் தற்போது திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியை சேர்ந்த  பெண்ணிற்கு, அதே பகுதியை சேர்ந்த அப்பாராவ் என்பவர் உடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. மனைவியின் கள்ளக்காதல் பற்றி அறிந்த கணவர், கடும் கோபத்தில் கள்ளக் காதலனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து அதில் RIP என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த கள்ளக்காதலன் பெங்களூரில் வேலை செய்து வந்த தன்னுடைய கள்ள காதலியின் கணவனை நண்பருடன் சேர்ந்து கடத்தி சந்திரகிரிக்கு கொண்டு வந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை கொண்டு சென்ற இரண்டு பேரும் தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்தனர். பின்னர் இரண்டு பேரும் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர்.

தொடர்ந்து உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று அந்த அப்பாவி கணவனை மிரட்டி பேச வைத்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இந்த வீடியோக்கள் இரண்டும் சமூக வலைதளங்களை வைரலானதை தொடர்ந்து அப்பாராவ், அவருடைய நண்பர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் இரண்டு பேரிடரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அப்பாவி கணவன் தற்போது திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

First published:

Tags: Crime News, Extramarital affair, Illegal affair