Home /News /national /

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை கள்ள காதலனுடன் சேர்ந்து குக்கரால் அடித்து கொலை செய்த மனைவி

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை கள்ள காதலனுடன் சேர்ந்து குக்கரால் அடித்து கொலை செய்த மனைவி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Andhra Pradesh Shocker : வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கணவனை காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டு கொலை செய்த மனைவி கைதாகியுள்ளார்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கும்  மிருதுளா என்ற பெண்ணக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு தற்போது 7 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு வெளிநாட்டில் பேராசிரியர் வேலை  கிடைத்தது. எனவே அவர் தனது மனைவி, மகன் ஆகியோரை சொந்த ஊரில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

    அந்த சமயத்தில் மிருதுளாவுக்கு அந்த பகுதியை சேர்ந்த சங்கர் என்ற 18 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் ரகசிய உறவாக மாறியுள்ளது. யாருமில்லாத சமயத்தில் தனிமையில் சந்தித்து இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பினார். கணவன் வீட்டுக்கு வந்து விட்டதால் தங்களுடைய கள்ளக்காதலை தொடர இயலாது என்று கருதிய மிருதுளா கவலை அடைந்தார்.

    மேலும் கணவனிடம் சரியாக பேசாமலும், நெருக்கம் காட்டாமலும் மிருதுளா இருந்து வந்தார். இதனால் முரளிக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் முரளி தன்னுடைய தாயை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்று இருந்தார். அந்த நேரத்தில் காதலனை வீட்டுக்கு வரவழைத்த மிருதுளா இனிமேல் நாம் இதற்கு முன்னர் இருந்தது போல் நெருக்கமாக இருக்க இயலாது என்று தெரிவித்தார்.

    அப்போது காதலன் சங்கர், முரளியை கொலை செய்து விடலாம் என்று கூறியிருக்கிறான். காதலனின் கொலை திட்டத்தை மிருதுளா ஏற்றுக்கொண்டார். அதன்படி சம்பவத்தன்று இரவு முரளி தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அவரது தலையில் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார் மிருதுளா. பின்னர் காதலனை அழைத்து இருவரும் முரளியின் சடலத்தை யாரும் பார்க்காத இடத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து முரளியை தூக்கி போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, முரளியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வீட்டிற்கு வெளியே குப்பை.. பஞ்சாப் முதலமைச்சர் வீட்டிற்கு ரூ.10,000 அபராதம் விதித்த மாநகராட்சி

    இதனிடையே முரளியின் தாய், தனது மகனை வீட்டிற்கு வந்து தேடியுள்ளார். அங்கு அவர் காணமல் போனதாக மனைவி கூற, தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மிருதுளாவை துருவி துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் மிருதுளா,சங்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை, ரகசிய காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh, Extramarital affair, Vishakapatnam

    அடுத்த செய்தி