ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலியுடன் ரகசிய ஷாப்பிங் வந்த கணவர்... கடைவீதியில் மனைவியிடம் மாட்டி உதைவாங்கும் வீடியோ வைரல்!

காதலியுடன் ரகசிய ஷாப்பிங் வந்த கணவர்... கடைவீதியில் மனைவியிடம் மாட்டி உதைவாங்கும் வீடியோ வைரல்!

தோழியுடன் ஷாப்பிங் செய்த போது மனைவியிடம் சிக்கிய கணவன்

தோழியுடன் ஷாப்பிங் செய்த போது மனைவியிடம் சிக்கிய கணவன்

மனைவிக்கு தெரியாமல் தோழியுடன் ஷாப்பிங் வந்த கணவர் அங்கு மனைவியிடமே மாட்டி உதை வாங்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ghaziabad, India

வடமாநிலங்களில் கர்வா சவுத் என்ற பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது திருமணமான ஆண்- பெண் இல்வாழ்க்கை நலனை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சடங்கை கொண்டாடும் பெண்கள், தனது கணவர் நீண்டகாலம் நலமாக வாழ சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை விரதம் இருந்து மாலையில் நிலவை பார்த்து அதை வழிபட்டு விரதத்தை முடிப்பார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தனது மனதுக்கு பிடித்தமான வாழ்க்கை துணை அமைய இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். பொதுவாக அக்டோபர் மாதத்தில் இந்த பண்டிகை நாள் வரும். இந்தாண்டு கர்வா சவுத் பண்டிகை நேற்றும், இன்றும் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த பண்டிகைக்கான ஏற்படுகள் வட மாநிலங்களில் களைக்கட்டியுள்ளது. ஜோடிகள் இந்த பண்டிகையைக் கொண்டாட கடை வீதிகளுக்கு சென்று ஆர்வத்துடன் ஷாப்பிங் செய்துவருகின்றனர்.

அப்படி விழாக்கோலம் பூண்டுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் தனது மனைவியை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் கர்வ சவுத் பண்டிகைக்காக ஷாப்பிங் சென்று கடை வீதியில் மனைவியிடம் சிக்கி உதை வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: பேஸ்புக்கில் மர்ம ஹைக்கூ கவிதை.. இரண்டாவது நரபலியின்போது எழுதி பதிவிட்ட கொலையாளி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் இந்த தம்பதி வசித்து வருகின்றனர். இருவருக்கும் அண்மையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மனைவி தற்போது தனது அம்மா வீட்டில் இருந்துள்ளார். பண்டிகை வருகிறதே என காசியாபாத் மார்கெட்டில் ஷாப்பிங் செய்ய தாயுடன் வந்துள்ளார் மனைவி. அப்போது தான் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் வந்ததை அவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆத்திரத்தில் கணவரை கடை வீதியில் வைத்தே தாக்கத் தொடங்கியுள்ளார்.

தடுக்க வந்த கணவரின் தோழியையும் மனைவியும் அவரது தாயும் தாக்கியுள்ளனர். கடைக்காரர் வெளியே போய் சண்டை போட்டுக்கொள்ளுங்கள் என கதறி பார்த்தும் அதை கண்டுகொள்ளாமல் கணவரை மனைவியும் அவரது தாயும் தாக்கியுள்ளனர்.மேலும், கணவருக்கு எதிராக காவல்துறையிடம் புகார் ஒன்றையும் மனைவி தந்துள்ளார். சினிமாவில் வருவது போல மனைவிக்கு தெரியாமல் தோழியுடன் ஷாப்பிங் வந்து,மனைவியிடமே மாட்டி உதை வாங்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Extramarital affair, Husband Wife, Karva Chauth, Uttar pradesh, Viral Video, Wife Attacks Husband