முகப்பு /செய்தி /இந்தியா / திருமண நாளை மறந்த கணவர்.. தாய், அண்ணனை வைத்து அடித்து உதைத்த பெண்..!

திருமண நாளை மறந்த கணவர்.. தாய், அண்ணனை வைத்து அடித்து உதைத்த பெண்..!

காட்சிப்படம்

காட்சிப்படம்

கணவர் திருமண நாளை மறந்ததால் மனைவி கணவனிடம் சண்டை போட்டு, தாய் மற்றும் அண்ணனை வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

மும்பையில் 27 வயதான பெண், தனது கணவர் திருமண நாளை மறந்ததால் கோபமடைந்து தாய் மற்றும் அண்ணனை அழைத்து கணவரை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைப் பற்றி கணவன் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் பெண் குடும்பத்தாரின் நான்கு பேர் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மும்பையில் காட்கோபர் பகுதியில் வசிக்கும் 27 வயதான கல்பனா என்ற பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு விஷால் நங்ரே என்ற நபரைத் திருமணம் செய்துள்ளார். விஷால் நங்ரே டிரைவராக பணியாற்றுகிறார். அவரின் மனைவி கல்பனா உணவு கடையில் வேலை செய்கிறார்.

இந்த நிலையில், பிப்ரவரி 18 ஆம் நாள் கணவர் திருமண நாளை மறந்துவிட்டதால் கல்பனா கோபம் அடைந்து சண்டை போட்டுள்ளார். அப்படியே இருவருக்கும் சண்டை பெரியதாகி கல்பனா அவரின் அம்மாவிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, கல்பனாவின் அம்மாவும் அண்ணனும் வீட்டிற்கு வந்து விஷால் நங்ரே-வை அடித்துள்ளனர். மேலும் அவரின் வண்டியையும் வீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர். விஷால் நங்ரே அம்மாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Also Read : இப்படியா பழிவாங்குறது.. கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த மனைவி - ஓடிப்போன நபரின் மனைவியை திருமணம் செய்த கணவர்

இது குறித்து விஷால் நங்ரே, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் விசாரணை நடத்திய போலீஸ் பெண் குடும்பத்தார் நான்கு பேர் மேல் வழங்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Marriage, Mumbai