கணவன் மனைவிக்குள் நடைபெறும் சண்டைகள் என்பவை மிகவும் சாதாரணமானவை. இருப்பினும் நிகழ்காலங்களில் சற்று விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கணவன் டிவி அதிகமாக பார்த்ததால் கோபமடைந்த மனைவி அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் சத்தர்பூரை சேர்ந்தவர் சஞ்சய் சோனி. கடந்த சில நாட்களாகவே அவரது மனைவி டிவி அதிகம் பார்க்க கூடாது என சஞ்சய் சோனியை எச்சரித்துள்ளார். அதனை பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார் சஞ்சய். இந்த சமயத்தில் கடந்த ஹோலி தினத்தன்று கணவர் அதிகமாக டிவி பார்ப்பதாக குற்றம் சாட்டியதால் சண்டை தொடங்கி இருக்கிறது.
கணவன் மனைவி இடையே சிறியதாக தொடங்கிய சண்டை கை கலப்பாக மாறி ஆத்திரமடைந்த மனைவி சஞ்சையை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது இடது கண் சேதமடைந்தது. கணவனைக் காயப்படுத்திய பிறகு, அந்தப் பெண்ணும் அவரின் சேமிப்பு மற்றும் நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பெற்றோரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். தற்போது அந்த நபர் தனது மனைவி மீது புகார் அளிக்க மனுவுடன் காவல் நிலையத்தை நாடியுள்ளார்.
டிவி பார்த்ததற்காக இப்படி ஒரு தண்டனையா என அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.