கள்ளகாதலி வீட்டில் கணவர்... கையும் களவுமாக பிடித்து இருவரையும் போலீசில் ஒப்படைத்த மனைவி...!

லஷ்மனின் கள்ளகாதலி அனுஷா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 10:52 PM IST
கள்ளகாதலி வீட்டில் கணவர்... கையும் களவுமாக பிடித்து இருவரையும் போலீசில் ஒப்படைத்த மனைவி...!
கள்ளகாதலியுடன் லஷ்மன்
Web Desk | news18
Updated: July 26, 2019, 10:52 PM IST
தனது கணவனின் கள்ளகாதலி வீட்டிற்குள் நுழைந்து, கணவனுக்கும் அவருடைய கள்ள காதலிக்கும் தர்ம அடி கொடுத்த மனைவி 2 பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

ஹைதராபாத் கொட்ட கொம்மு கூடம் பகுதியை சேர்ந்த லஷ்மன்-சுஜன்யா ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சில காலம் மனையியுடன் வசித்த லஷ்மன் பின்னர் கூக்கட்பள்ளியில் வசிக்கும் அனுஷா என்ற பெண் வீட்டிற்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த சுஜன்யா எவ்வளவோ கெஞ்சி கேட்டும் லஷ்மன் வீட்டுக்கு வரவில்லை. எனவே விவாகரத்து கேட்டு சுஜன்யா நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் லஷ்மன் மௌனமாக இருந்து வந்தார்.


மனைவி சுஜனாவுடன் லஷ்மன்


இதனால் கோபம் அடைந்த சுஜன்யா இன்று அதிகாலை உறவினர்களுடன் அனுஷா வீட்டிற்கு சென்று கணவன் லஷ்மன், அவருடைய கள்ளகாதலி அனுஷா ஆகியோரை தாக்கி கூக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து கூக்கட்பள்ளி போலீசார் நடந்த சம்பவங்கள் குறித்து லஷ்மனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading...

லஷ்மனின் கள்ளகாதலி அனுஷா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...