ஹோம் /நியூஸ் /இந்தியா /

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி.. உயிருடன் தீவைத்து கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி.. உயிருடன் தீவைத்து கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கணவர் பிரசாத்திற்கு திருமணத்தை தாண்டி வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்துள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தம்பதி இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்துவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thane, India

  மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர் குடும்ப தகராற்றில் தனது மனைவி மற்றும் இரு மகள்களை தீவைத்து கொளுத்தியுள்ளார்.

  மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவிலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் ஷாந்தராம் பாடீல். இவருக்கு வயது 40. இவரது மனைவி பீரீதி ஷாந்தாராமுக்கு வயது 35. இருவருக்கு 14 வயதில் சமீரா மற்றும் 11 வயதில் சமிக்ஷா என்று இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பிரசாத்திற்கு திருமணத்தை தாண்டி வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் மனைவி ப்ரீதிக்கும் தெரியவந்த நிலையில், தம்பதி இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்துவந்துள்ளது.

  இது கணவர் பிரசாத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், தனது மனைவி மற்றும் மகள்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே, கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை வேளையில், தனது வீட்டிலேயே அவர்களை தீ வைத்து கொளுத்தி குடும்பத்தினரை விபத்தில் உயிரிழந்ததாக செட் செய்து வைத்து, தான் மட்டும் தப்பிக்கொள்ள பிரசாத் திட்டமிட்டுள்ளார்.

  சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் உயிருடன் தீவைத்துள்ளார். இதில் பிரசாத்திற்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 3 மணி நேரம் கழித்து தான் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மனைவி ப்ரீத்தி, மகள்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், பலத்த தீக்காயங்களுக்கு ஆளான மனைவி ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

  இதையும் படிங்க: முலாயம் சிங் யாதவிற்கு உடல் நலக்குறைவு.. அகிலேஷிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

  90 சதவீத தீக்காயங்களுடன் இரு மகள்களும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பிரசாத் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Fire, Husband Wife, Maharashtra, Murder, Thane