செங்கோட்டைக்குள் போராட்டக்காரர்களை அனுமதித்தது யார்? ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டியதன் நோக்கம் என்ன என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் போராட்டக்காரர்களை உள்ளே அனுமதித்தது யார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். பல்வேறு பகுதிகளில் போலீஸ் தடுப்புகளை மீறி நகருக்குள் புகுந்ததால் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, குடியரசு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செங்கோட்டைக்குள் ஏன் அனுமதிக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பினார்.

  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டியதன் நோக்கம் என்ன என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டு சுமூக நிலையை எட்ட வேண்டும் என்றும் ராகுல் அறிவுறுத்தியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்து, அவற்றை கிடப்பில் போடுவதே உரிய தீர்வாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
  Published by:Vijay R
  First published: