Home /News /national /

விலை குறைவென்றால், 36 ரஃபேல் விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

விலை குறைவென்றால், 36 ரஃபேல் விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

ரஃபேல் ஊழல்

ரஃபேல் ஊழல்

  • News18
  • Last Updated :
    ரஃபேல் விமானங்கள் விலைக்குறைவாக வாங்கப்படுகிறது எனில், 126 விமானங்கள் தேவைப்படும் நிலையில் 36 விமானங்களை மட்டுமே வாங்குவது ஏன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது . 20 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, வலைதளம் மூலமும் நாடு முழுவதும் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று கூறினார்

    மேலும் ,`பாஜக அரசு செய்த தவறுகளுக்கு எல்லாம் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சுமத்துகிறார் ராணுவ அமைச்சர். விமானங்கள் விலை 9 சதவீதம் குறைவு என்கிறது போது 126 விமானங்கள் வாங்கியிருக்க வேண்டியது தானே 36 விமானங்கள் மட்டும் வாங்கியதன் மர்மம் என்ன ?பாஜக அரசின் பொருளாதார தவறுகளை, குளறுபடிகளை தொடர்ந்து விமர்சிக்கிறேன், கட்டுரை எழுதுகிறேன். பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான தகுதி குறைவு என்று பெரும்பான்மையான மக்கள் நம்புகிறார்கள். டாலர் விலை அதிகரிக்கும் போது பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது . பாஜக ஆட்சியில் அடக்கு முறை தான் அவர்களது கொள்கை” என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.

    காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றும், விலை குறைவாக கிடைக்கிறது என்றால் 126 விமானங்கள் தேவைப்படும் நிலையில் 36 விமானங்களை மட்டுமே வாங்கியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது தற்போதுள்ள அதிமுக தலைவர்கள் எங்கிருந்தார்கள் எனத் தெரியாது என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்வதாகவும், மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: BJP, Congress, P.chidambaram, Rafale Scam

    அடுத்த செய்தி