ஹோம் /நியூஸ் /இந்தியா /

வழக்குகள் பட்டியலிடப்படுவதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஏன்? - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

வழக்குகள் பட்டியலிடப்படுவதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஏன்? - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

Delhi supreme Court | வழக்குகள் பட்டியலிடப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து முந்தைய தலைமை நீதிபதி என்.வி.ரமனாவும் தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பட்டியலிடப்படுவதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஏன் என விளக்கம் அளிக்குமாறு பதிவுத்துறை ஊழியர்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு  தலைமை நீதிபதி யுயு.லலித் மற்றும் நீதிபதி பேலா திரிவேதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

  அந்த வழக்கின் தன்மை குறித்து ஆய்வு செய்த தலைமை நீதிபதி வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இவ்வளவு நீண்ட தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்ற பதிவுத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்க தலைமை நீதிபதி யுயு.லலித் உத்தரவிட்டார்.

  இதையும் படிங்க : சீரியல் நடிகையின் லவ் சீரிஸ்.. மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட முன்னாள் காதலன் - தெலங்கானாவில் பகீர் சம்பவம்

  மேலும், இதேபோல் பதிவு செய்யப்பட்டு உகந்ததாக இருந்தும் நீண்ட காலமாக விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் இருக்கும் வழக்குகளின் பட்டியலையும் இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பதிவுத்துறைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

  உச்ச நீதிமன்றத்தின் பதிவுத்துறை இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. சில வழக்குகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு விரைவாக விசாரணைக்கு பட்டியலிடப்படுவதாகவும், பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே பதிவுத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  இதுதொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் திறந்த நீதிமன்றத்தில் தனது அதிருப்தியையும் பதிவு செய்திருக்கிறது. ஆனாலும் இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் முந்தைய நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்த சில வழக்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

  இதற்கு கடும் கண்டனத்தை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியிருந்தது. வழக்குகள் பட்டியலிடப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து முந்தைய தலைமை நீதிபதி என்.வி.ரமனாவும் தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார். தலைமை நீதிபதியாக பதவியேற்ற உடனேயே நீதிபதி யுயு.லலித், நீண்டகாலமாக பட்டியலிடப்படாமல் இருக்கும் வழக்குகள் குறித்த விபரங்களை கேட்டறிந்து அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

  இதையும் படிங்க : அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அமலாக்கத்துறையை ஏவிவிடும் பாஜக - ஜார்க்கண்ட் முதல்வர் விமர்சனம்

  அவற்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் இருந்துள்ளன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள் பத்து நாட்களுக்குள் விசாரணைக்கு பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

  கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நிதிபதியாக பதவியேற்ற யுயு.லலித் வரும் 8 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதியாக யுயு.லலித் 74 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்கவுள்ளார்.

  செய்தியாளர் : ரோசாரியோ ராய்

  Published by:Karthi K
  First published:

  Tags: Delhi, Supreme court