ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்து பேச மறுப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

இந்திய சீன எல்லை பிரச்சனை குறித்து பேச மறுப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகி உள்ளது. அடுத்த ஆண்டு அதை இரட்டிப்பாக்க முடியுமா என ப. சிதம்பரம் கேள்வி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைப் போல, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க பாஜக அரசால் முடியுமா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசினார்.

இதையும் படிக்க :  இந்தி உங்களுக்கு உதவாது... ஆங்கிலம் படியுங்கள்! - ராகுல் காந்தி அட்வைஸ்

அப்போது, பாதுகாப்புத்துறைக்கு 500 கோடி ஒதுக்கீடு செய்ய மசோதாவில் அனுமதி கோரியுள்ள மத்திய அரசு, இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க மறுப்பது ஏன் என வினவினார். 1991-ம் ஆண்டில் இருந்து சராசரியாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகி வந்ததை சுட்டிக்காட்டிய அவர், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசால் முடியுமா என கேள்வி எழுப்பினார்.

First published:

Tags: India vs China, Indo Tibetan Border, P.chidambaram