காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி மஹிரா இர்ஃபான், நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் புகாரளித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளால் விரக்தியடைந்து பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெறும் 45 விநாடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது:
எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?. என்று அந்தச் சிறுமி பேசியது வைரலானது.
Read More: 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு
இந்த வீடியோவைப் பார்த்த தந்தை தன் நண்பர்களுடன் இதை வாட்ஸ் அப் செயலியில் ஷேர் செய்தார். ஆனால் அப்போது தங்கள் குழந்தை இணையதளப் பரபரப்பாவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
தற்போது இது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கவனத்துக்கும் சென்றுள்ளது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, குழந்தையைப் பாராட்டி ட்வீட் செய்த போது, “குழந்தைப் பிராய வெகுளித்தனம் என்பது கடவுள் தந்த பரிசு. அவர்களின் அந்த சிறுபிராயம் மகிழ்ச்சியுடனும் உயிரோட்டத்துடனும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kashmir, Online class