News18 இன் முன்முயற்சியான BYJU’S Young Genius இன் முதல் சீசன் பற்றி அறிவிக்கப்பட்டபோது, அதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அநேகமாக குழந்தைகள் ஒரே தளத்தில் இருந்துகொண்டு தங்களின் திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தி, பார்வையாளர்களை வியக்க வைப்பதும், மில்லியன் கணக்கான குழந்தைகளை ஊக்குவிப்பதும் அதுவே முதல் முறையாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், பாட்டு அல்லது நடனம் போன்ற ஒரு சில வகையைச் சாராத பல குழந்தைகள் சிறந்த மன உறுதி, கல்வி ஞானம், விளையாட்டுத் திறன்களுடன் BYJU’S Young Genius இல் ஷோஸ் டாப்பர்களாக இருந்தனர்.
முதல் சீசனின் வெற்றி, மற்றொரு சீசன் நெருங்கி வரவிருக்கிறது என்பதைக் குறித்தது. இப்போது நமது ஆசைகள் நிறைவேறிவிட்டன மற்றும் வரவிருக்கும் BYJU’S Young Genius க்கான முன்பதிவுகள் பெற்றோர்களிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் மிகுந்த வரவேற்புடன் சிறப்பாக நடந்து வருகிறது. BYJU’S Young Genius Season 2 இன் ஒரு பகுதியாக இருந்து அதனுடனான உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு வாய்ப்பு.
BYJU’S YOUNG GENIUS இல் ஏன் சேர வேண்டும்?
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல காரணங்கள் உள்ளன, இது குழந்தைகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் தங்களின் அசாதாரண திறன்களை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கிறது. மிகப்பெரிய வெகுமதியானது குழந்தைகளுக்குக் கிடைக்கும் தன்னம்பிக்கையும், அவர்களின் திறமைகளில் பெருமையடைந்து அதை அவர்கள் உலகிற்கு வெளிப்படுத்தும் திறமையுமாகும்.
குழந்தைகள் தங்கள் வெற்றியின் பயணத்தைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்துக் கொள்வது இன்னும் பல மேதைகளை ஊக்குவிக்கும் மற்றும் உருவாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மேதையை மறைத்து வைப்பதில் என்ன பயன்?
இரண்டாவது நன்மை, குழந்தைகள் நன்கு அறியப்பட்ட ஆளுமைகள் மற்றும் நடுவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள், அந்த நபர்கள் குழந்தைகளின் திறன்களை விமர்சிப்பது மட்டுமல்லாமல், தங்கள் சொந்த வாழ்க்கைக் கதைகளின் மூலம் அவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்குவிக்கிறார்கள். புகழ்பெற்ற நபர்கள் தங்கள் திறமையை புரிந்துகொள்ள தாங்கள் சந்தித்த சொந்த போராட்டங்களைப் பற்றி பேசுவதைக் கேட்பது உங்கள் குழந்தையின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் உளவியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும்.
இறுதியில், சீசன் 1 இன் நீடித்த லெகஸி அதில் பங்கேற்ற போட்டியாளர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றிவிட்டது. இந்தியா முழுவதும் உள்ள தேசிய மற்றும் பிராந்திய சேனல்களின் மூலம், அவர்களின் திறமை ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது. அற்புதமான டிரம்மராக இப்போது பரவலாக அறியப்படும் அன்ஷுமான் நந்தி முதல், இளைய வயது கர்நாடக இசைப் பாடகர் ஸ்வஸ்திக் பரத்வாஜ், தனது 11 வயதில் பருவநிலை செயல்பாட்டை எடுத்துரைத்த ரிதிமா பாண்டே உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற மேதைகள் அனைவரும் பல குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உண்மையான முன்மாதிரிகளாக மாறினர்.
எவ்வாறு முன்பதிவு செய்வது?
புதிய சீசன் தொடங்கியவுடன், இதுபோன்ற பல பெயர்கள் புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் BYJU’S Young Genius 2 இல் உங்கள் குழந்தையைச் சேர்க்க அதிக நேரம் காத்திருக்க வேண்டாம். பதிவுகள் விரைவில் முடிவடையும், அதேசமயம் உங்கள் குழந்தையின் திறமைகள் கவனிக்கப்படாமல் இருப்பதையும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே முன்பதிவு இணைப்பிற்குச் சென்று விண்ணப்பத்தை இங்கே நிரப்புங்கள்
https://www.news18.com/younggenius/
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.