ஓட்டுப் போடாமல் வெளிநாடு பறந்த பிரியங்கா காந்தியின் மகன்! காரணம் இது தான்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் உள்ள சர்தார் படேல் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் சென்று வாக்களித்தார்.

Vijay R | news18
Updated: May 12, 2019, 4:44 PM IST
ஓட்டுப் போடாமல் வெளிநாடு பறந்த பிரியங்கா காந்தியின் மகன்! காரணம் இது தான்
பிரியங்கா காந்தி
Vijay R | news18
Updated: May 12, 2019, 4:44 PM IST
மக்களவைத் தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொது மக்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் உள்ள சர்தார் படேல் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் சென்று வாக்களித்தார். அவரது மகன் ரேஹன் வதேரா(19) வாக்களிக்க வரவில்லை. முதன்முறையாக வாக்களிப்பவர்களில் ரேஹனும் ஒருவர்.

ரேஹன் வாக்களிக்க ஏன் வரவில்லை என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “ரேஹனுக்கு தற்போது பரிட்சை நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அதனால் அவர் லண்டன் சென்றுள்ளார். அதனால் தான் அவரால் இன்று வாக்களிக்க வர முடியவில்லை'' என்றார்.

உத்திரபிரதேச மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி செய்த பிரச்சாரத்தின் போது ரஹேன் வதேராவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Also Watch

First published: May 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...