Home /News /national /

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையாதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையாதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சித்தது பேசு பொருளானது.

ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சித்தது பேசு பொருளானது.

ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சித்தது பேசு பொருளானது.

    பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாதது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார்.

    ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வெளியிட்டனர். அதில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 8 லட்சம் பணியிடங்கள் மகளிருக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடக்கப்பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும், கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்க 1 விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, தனது முகமே அனைத்து இடங்களிலும் தெரிவதாக கூறினார்.

    Also read: பாகிஸ்தான் சிதைந்துவிடும், இம்ரான் கான் ஐஎஸ்ஐ கைப்பாவை - தாலிபான்கள் கடும் தாக்கு

    இதனிடையே, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் உத்தி செயற்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனப் பேசப்பட்டது. ஆனால், பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது சாத்தியமாகவில்லை.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணையாதது குறித்தும் பேசியுள்ளார்.

    அவர் கூறியதாவது, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உண்மை தான். ஆனால், எங்கள் பகுதியிலும் சில கெடுபிடிகள், அவர் தரப்பிலும் சில பிடிவாதங்கள். இதனால் அந்த இணைப்பு சாத்தியப்படாமல் போனது என்று கூறினார்.

    முன்னதாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை தனித்தனியாக சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பு சுமுகமான முடிவுடன் நிறைவு பெறவில்லை. ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சித்தது பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.

    Also read:  ‘ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி - பயணிகள் கதறல்..
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி