ஹோம் /நியூஸ் /இந்தியா /

எங்கப்பா கரண்ட்ட காணோம் - தோனி மனைவி சாக்ஷி ட்விட்டரில் கேள்வி!

எங்கப்பா கரண்ட்ட காணோம் - தோனி மனைவி சாக்ஷி ட்விட்டரில் கேள்வி!

கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி, மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து ட்விட்டரில் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி, மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து ட்விட்டரில் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி, மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து ட்விட்டரில் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய அணியின் முன்னாள்  கேப்டனான  எம்எஸ் தோனியின்  மனைவி சாக்ஷி சிங் தோனி. தோனி சாக்ஷி தம்பதி தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சியல் வசித்துவருகின்றனர்.

   இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு தொடர்பாக அரசிடம் கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.

  சாக்ஷி தனது ட்வீட்டில், 'ஜார்க்கண்ட் மாநிலத்தின் வரி செலுத்தும் குடிமகளான நான், நீண்ட காலத்திற்குப் பிறகு மாநிலத்தில் மின்வெட்டு நிலவுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கிற்கு மின்சாரத்தை சேமிக்கும் வேலையை முறையாக செய்து வருகிறோம்' என்றுள்ளார்.

  கடந்தாண்டு ஜூலை 16ஆம் தேதி தான் சாக்ஷி தோனி  கடைசியாக  ட்வீட்  செய்துள்ளார்.  இந்நிலையில், சுமார் ஓராண்டுக்குப்பின் இந்த மின்வெட்டு குறித்து தற்போது ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் தற்போது கோடையின் தாக்கம் உச்சம் தொட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் வெட்டு பிரச்னை எழுந்துள்ளது. குறிப்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சில இடங்களில் 10 மணிநேர மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

  இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கு முறையாக மின் விநியோகம் கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மாநிலங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சர்  அஸ்வினி  வைஷ்னவை  அமைச்சர்  ஆர்கே சிங் சந்தித்து பேசினார். இந்த மின்வெட்டு தொடர்பாக கோல் இந்தியா நிலக்கரி நிறுவனமும்,நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் விளக்கம் அளித்துள்ளனர். அதில், நாட்டில் நிலக்கரி தட்டுபாடு ஏதும் நிலவவில்லை எனவும், மின் உற்பத்தி நிலையங்களில் தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததே பற்றாக்குறைக்கு காரணம் எனக் கூறியுள்ளனர்.

  கோடைக் காலம் என்பதால் நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ள சூழலில், கோல் இந்தியாவிடம் 72.50 மெட்ரிக் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளன. சில மின் உற்பத்தி நிலையங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதால் அவை வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை நம்பியுள்ளன. தேவை அதிகரித்துள்ளதால் நிலக்கரியின் விலையும் உயர்ந்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Power cut, Sakshi dhoni