ஜிஎஸ்டிக்கு பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படாதthu ஏன் என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பதிலளிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை தொடர்ந்த் அதிகரித்து வந்த சூழலில், மத்திய அரசின் கலால் வரி குறைப்பு காரணமாக அவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் (GST_ கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர உத்தரவிடக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில அரசுகளின் வரி காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகின்றன. அரசியலமைப்பின் 279A(6) பிரிவின் கீழ் கருதப்படும் இணக்கமான தேசிய சந்தையை அடைவதற்கு இது தடையாக உள்ளது என்றும் வாதாடப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து பயண கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் ஆகியவை ஜிஎஸ்டிக்குள் சேர்க்கப்படாது ஏன் என்று கேள்வி எழுப்பிய கேரள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் பத்து நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பெட்ரோல் விலையை ஏற்றிய முட்டாள்தான் குறைக்க வேண்டும்: மத்திய அரசை கடுமையாக விமர்சித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GST, GST council, Petrol Diesel Price